விஜயின் பீஸ்ட் படத்திற்கு குவைத்-ல் திடீர் தடை: படக்குழுவினர் அதிர்ச்சி
Tamil Cinema Update : ஷாப்பிங் மாலை தனது கன்ரோலில் வைத்துள்ள தீவிரவாதிகளிடம் இருந்து பணையகைதியாக உள்ள மக்களை ரா ஏஜெண்ட் வீரராகவன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே திரைக்கதையாக இருக்கலாம்
Tamil Cinema Update : ஷாப்பிங் மாலை தனது கன்ரோலில் வைத்துள்ள தீவிரவாதிகளிடம் இருந்து பணையகைதியாக உள்ள மக்களை ரா ஏஜெண்ட் வீரராகவன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே திரைக்கதையாக இருக்கலாம்
Tamil Cinema Beast Banned In Kuwait: மாஸ்டர் படத்திற்கு பின் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கு குவைத் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisment
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் தற்போது தயாராகியுள்ள படம் பீஸ்ட். டாக்டர் படத்தின் இயக்குநர் நெல்சன் இயக்கும் இந்த படத்தில், பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். மேலும் முக்கிய கேரக்டரில் இயக்குநர் செல்வராகவன். யோகிபாபு, ரெட்டின் கிங்ஸ்ளே ஆகியோர் நடித்துள்ளனர்.
சன்பிச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரி்த்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா என இரண்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், கடந்த ஏப்ரல் 2-ந் தேதி இப்படத்தில் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
வீரராகவன் என்ற ரா ஏஜெண்டாக விஜய் நடித்துள்ள இந்த படம், ஷாப்பிங் மாலை தனது கன்ரோலில் வைத்துள்ள தீவிரவாதிகளிடம் இருந்து பணையகைதியாக உள்ள மக்களை ரா ஏஜெண்ட் வீரராகவன் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே திரைக்கதையாக இருக்கும் என்று டிரெய்லரை பார்த்து தெரிந்துகொள்ளும் வகையில் உள்ளது.
Advertisment
Advertisements
ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்திற்கு தற்போது குவைத் நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், குவைத்தின் நலன்களுக்கு எதிரான இஸ்லாமிய பயங்கரவாதத்தின் காட்சிகள் வருவதால், இந்த படத்திற்கு தடை விதிக்க குவைத் அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கனவே, துல்கர் சல்மானின் குருப் மற்றும் விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் தடை செய்யப்பட்டன.
இதில் குரூப் படத்தில் போலீசாரால் தேடப்பட்டு வரும் குற்றவாளி குவைத் நாட்டில் தஞ்சம் அடைவது போன்ற காட்சிகள் இருந்ததாலும், எப்ஐஆர் படத்தில் பயங்கரவாதத்தை காட்டியதாலும் தடை விதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், பொதுவாக அரபு நாடுகளை தீவிரவாதிகளின் தாயகமாக காட்டும் படங்களுக்கு குவைத்தில் அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீஸ்ட் படம் வெளியான இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், குவைத் அரசின் இந்த முடிவு படக்குழுவுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆனாலும், குவைத்தில் உள்ள ரசிகர்கள் படத்தைப் பார்க்க வேறு நாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும் என்று தெரிகிறது. ஆனாலும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற அரபு நாடுகளில் பீஸ்ட் வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil