விஜயின் லியோ படம் பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே வரும் 19-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தை பார்க்க விஜய் ரசிகர்கள் பலரும் அண்டை மாநிலங்களுக்கு படையெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள லியோ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழகத்திற்கு படத்திற்கு சிறப்பு காட்சி அனுமதி அளித்த தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் வித்தித்துள்ளர். அதன்படி, லியோ படத்தின் முதல் நாள் முதல் காட்சி காலை 9 மணிக்கு தான் தொடங்க வேண்டும் என்றும், நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகளை திரையிட அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிறப்பு காட்சி அனுமதியை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், கலெக்டரின் தலைமையில் சிறப்பு குழு அமைத்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே லியோ படத்திற்கு காலை 4 மணி ரசிகர்கள் காட்சி அனுமதிக்க வேண்டும் என்று கூறி அரசுக்கு எதிராக பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது. இந்த வழக்கு அவசர வழக்காக நாளை விசாரணைக்கு வர உள்ளது.
இதனிடையே தமிழகத்தில் லியோ படம் 9 மணிக்கு தான் முதல் காட்சி வெளியாகும் என்று உத்தரவிட்டிருந்தாலும், அண்டை மாநிலமாக கேரளாவில் காலை 4 மணிக்கும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் காலை 6 மற்றும் 7 மணிக்கும் லியோ படம் திரையிடப்பட உள்ளது. அதேபோல் கர்நாடகாவிலும் காலை 4 மணிக்கு ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளது. அண்டை மாநிலங்களில் தமிழகத்திற்கு முன் லியோ படம் வெளியாக உள்ளது.
இதனால் விஜய் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ள நிலையில், பெரும்பாலான விஜய் ரசிகர்கள் லியோ படத்தை பார்ப்பதற்காக அண்டை மாநிலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே விஜய் நடித்த தலைவா படம் அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தில் வெளியாகாத நிலையில், விஜய் ரசிகர்கள் பலரும் ஆந்திரா கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தலைவா படம் பார்க்க சென்றது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“