15-வது இந்திய படம்... 3-வது தமிழ் படம்... ஐமேக்ஸில் வெளியாகும் லியோ

தளபதி விஜய் நடித்துள்ள லியோ படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்பத்தியுள்ள நிலையில், படம் ஐமேகஸில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தளபதி விஜய் நடித்துள்ள லியோ படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்பத்தியுள்ள நிலையில், படம் ஐமேகஸில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Leo Trailer OCT 05

ஐமேக்ஸில் வெளியாகும் லியோ திரைப்படம்

இந்திய சினிமாவில் 2023-ம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் லியோ படம் ஐமேக்ஸ்-ல் வெளியாகும் இந்தியாவின் 15-வது படம் என்ற சிறப்பினை பெற்றுள்ளது.

Advertisment

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் லியோ. சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம்மேனன், த்ரிஷா உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு, அனிருத் இசையமைத்துள்ள நிலையில், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

உலகம் முழுவதும் லியோ படத்திற்கான முன்பதிவு தொடங்கியுளள் நிலையில் பல படங்களில் சாதனைகளை முறியடித்து வருகிறது. மேலும் படத்தில் இருந்து வெளியான 3 பாடல்கள், டிரெய்லர் உள்ளிட்ட பல அப்டேட்கள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்த படம் எல்.சி.யூ – படத்தின் ஒரு பகுதியாக இருக்குமா என்ற கேள்வி படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

அதேபோல் படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் நிலையில், அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக லியோ படம் ஐமேக்ஸ்-ல் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐமேக்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இணைந்து லியோ படத்தை அக்டோபர் 19 ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியிட உள்ளது.

Advertisment
Advertisements

இதன் மூலம் லியோ ஐமேக்ஸ்-ல் திரையிடப்படும் 3-வது தமிழ் படம் மற்றும் 15 வது இந்திய படம் என்ற சிறப்பினை பெற்றுள்ளது. கோலிவுட்டில் ஏற்கனவே மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 1 மற்றும் பொன்னியின் செல்வன் 2 ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே ஐமாக்ஸில் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஐமேக்ஸில் வெளியான இந்திய படங்கள்

தூம் 3 (2013)

பேங் பேங்! (2014)

பாகுபலி 2 (2017)

பத்மாவத் (2018)

தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் (2018)

சாஹோ (2019)

ஆர்ஆர்ஆர் (2022)

கே.ஜி.எஃப் 2 (2022)

பிரம்மஸ்திரம் (2022)

பொன்னியின் செல்வன்1 (2022)

பதான் (2023)

போலா (2023)

பொன்னியின் செல்வன்2 (2023)

ஜவான் (2023)

லியோ (2023)

பெரிய திரைகளில் புதிய பரிணாமத்தை கொடுக்கும் ஐமேக்ஸ்-ல் லியோவின் கண்கவர் காட்சிகளுக்கு மேலும் பிரம்மாண்டத்தை ஏற்படுத்தும் என்பதால் ரசிகர்களுக்கு புதுவித அனுபவமாக இருக்கும். லியோ படத்திற்கு பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். டிரெய்லரில் அவரது அற்புதமான காட்சிகளை பார்த்திருக்கலாம். இந்த காட்சிகள் தமிழ் படங்களுக்கு ஒரு புதிய மைல்கல்லை அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Vijay IMAX

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: