Advertisment
Presenting Partner
Desktop GIF

மோகன்லால், யஷை பின்னுக்கு தள்ளிய விஜய்... கேரளாவில் புதிய வரலாறு படைத்த லியோ

தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா என தென்னிந்தியாவில் லியோ படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Kerala Leo History

கேரளாவில் வரலாறு படைத்த லியோ

ஆங்கிலத்தில் படிக்க : Vijay’s Leo scripts history in Kerala; sets record for highest opening day collection

Advertisment

தளபதி விஜய் நடித்துள்ள லியோ படம் பல தடைகளை தாண்டி நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், படம் முதல் நாள் வசூலில் கேரளாவில் புதிய வரலாறு படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்தள்ள படம் லியோ. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படம் பல தடைகளை கடந்து நேற்று வெளியான நிலையில், படம் குறித்து சிலர் கலவையான விமர்சனங்களை கொடுத்து வந்தாலும், விஜய் ரசிகர்கள் மற்றும் ஃபேமிலி ரசிகர்கள் என படத்திற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா ஆந்திரா தெலுங்கானா கர்நாடகா என தென்னிந்தியாவில் லியோ படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இதன் மூலம் லியோ படம் நடப்பு ஆண்டில் மிகப்பெரிய ஓப்பனிங் பெற்ற இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இது குறித்து இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் வெளியிட்டுள்ள அறிவிப்பில், லியோ படம் முதல் நாளில் உலகளவில் ரூ 140 கோடி வசூலித்ததாக அறிவித்துள்ளது.

அதே சமயம் பிங்க்வில்லா திரைப்படம் உலகளவில் ரூ 145 கோடி வசூலித்ததாக மதிப்பிட்டுள்ளது. இந்த இரண்டு தகவல்களுக்கும் இடையெ உள்ள வித்தியாசத்தை பொருட்படுத்தாமல் பார்த்தால், லியோ படம் சந்தேகத்திற்கு இடமின்றி அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தின் முதல் நாள் வசூலை முந்தியுள்ளது, ஜவான் முதல் நாளில் ரூ 129.1 கோடி தொடக்க வசூலைப் பெற்றது.

இதற்கிடையில், கேரளாவில் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பான வரவேற்பை பெற்று வரும் லியோ படம், முதல் நாளில், ரூ. 12 கோடியை வசூலித்துள்ளது. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்த கேஜிஎஃப் கேரளாவில் முதல் நாள் வசூல் ரூ.7.25 கோடி என்ற சாதனையை தற்போது விஜயின் லியோ படம் முறியடித்துள்ளது. ஸ்ரீகுமாரின் மோகன்லால் நடித்த ஒடியன் (ரூ. 6.76 கோடி) மற்றும் நெல்சனின் விஜய் நடித்த பீஸ்ட் (ரூ. 6.6 கோடி) உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனா. கேரளாவில் நேற்று இரவு லியோ படம் 313 இரவு நேர காட்சிகள் நடந்தன.

படத்தின் வெளியீட்டிற்கு முன்னதாக, ஸ்ரீ கோகுலம் மூவீஸுடன் இணைந்து கேரளாவில் லியோவின் இணை விநியோகஸ்தரான ட்ரீம் பிக் பிலிம்ஸின் சுஜித் நாயர், கேரளாவில் படத்தின் முதல் நாள் வசூல் இலக்கு ரூ.10 கோடிக்கு மேல் என்று இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். இருப்பினும், ஆரம்ப காட்சிகளுக்குப் பிறகு சாதகமான விமர்சனங்களைப் பெற்றால் படம் ரூ.12 கோடி வசூலிக்கும் வாய்ப்பு உள்ளது என்று அவர் கணித்திருந்தார். இப்போது சுஜித்தின் கணிப்புகள் சரியாக இருந்ததாகத் தெரிகிறது.

கேரளாவில் மொத்தமுள்ள 750 திரைகளில் 650க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் லியோ படம் திரையிடப்பட்டது. படத்தின் சாதகமான விமர்சனங்களைப் பொறுத்தவரை, லியோ மாநிலத்தில் சுமார் மூன்று வாரங்களுக்கு திரையரங்குகளில் சுமூகமான ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் மட்டுமே அதிக ரிலீஸுக்கு முந்தைய முன்பதிவை அனுபவிக்கும் பெரும்பாலான படங்களைப் போலல்லாமல், லியோ ஒரு விதிவிலக்கு என்று சுஜித் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், தெரிவித்திருந்தார்.

பல திரையரங்குகள், 6ஆம் நாள் வரை பெரும்பாலான காட்சிகளுக்கு முழு அல்லது 60-70 சதவீத காட்சிகள் முன்பதிவு செய்யப்பட்டுவிடடதாக தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 35 கோடியை வசூலித்துள்ளது. வெளிநாடுகளிலும் குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்று வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment