Advertisment

ஜெயிலரை மொத்தமாக வீழ்த்திய லியோ : 21 மணி நேரத்தில் புதிய சாதனை

லியோ டிரெய்லர் வெளியாகி 21 மணி நேரத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் டிரெய்லர் சாதனையை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Jailer Leo

ஜெயிலர் - லியோ

லியோ படத்தின் டிரெய்லர் வெளியான ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வெளியாகி ஒரு நாள் ஆவதற்கு முன்பாகவே ரஜனிகாந்தின் ஜெயிலர் படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் லியோ. இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில், அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. 2-வாரங்களுக்கு முன்னதாகவே ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்ட லியோ டிரெய்லர் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த டிரெய்லரில் விஜய் பேசிய கெட்டவார்த்தை ஒரு பக்கம் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தாலும் படத்தின் டிரெய்லர் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. அந்த வகையில் தற்போது லியோ படத்தின் டிரெய்லர் வெளியாகி ஒரு நாள் ஆகியுள்ள நிலையில், 21 மணி நேரத்தில் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் டிரெய்லர் சாதனையை முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leo Jailer

கடந்த ஆகஸ்ட் 15-ந்தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் தமிழ் சினிமாவின் பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியுள்ள நிலையில், ஷோகேஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்ட ஜெயிலர் படத்தின் டிரெய்லர் வெளியாகி 2 மாதங்கள் கடந்துள்ளது. தற்போதுவரை 3 கோடி பார்வையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் நேற்று வெளியான விஜயின் லியோ படத்தின் டிரெய்லர் 21 மணி நேரத்தில் சுமார் 3.1 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment