2023-ம் ஆண்டில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், எந்த நேரத்தில் வெளியாகும் என்ற அறிவிப்பு இல்லாததால் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Advertisment
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் வாரிசு படத்திற்கு பிறகு லியோ என்ற படத்தில் நடித்துள்ளார். மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் இயக்கியுள்ள லியோ படத்தில், சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன், த்ரிஷா உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான லியோ படத்தின் முதல் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த செப் 30-ந் தேதி நடைபெற இருந்த இசைய வெளியீட்டு விழா போலி டிக்கெட் மற்றும் போலீசார் அனுமதி விவகாரம் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.
இதனிடையே ரசிகர்களை சமாதானப்படுத்தும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன் லியோ படத்தின் 2-வது பாடல் வெளியிடப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு அக்டோபர் 5-ந் தேதி லியோ படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று அறிவிக்க்பபட்டது. படம் அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், 2 வாரங்களுக்கு முன்னதாகவே டிரெய்லர் வெளியீடு என்பது விஜய் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
Advertisment
Advertisements
தொடர்ந்து அக்டோபர் 5-ம் தேதியான இன்று லியோ டிரெய்லர் எந்த நேரத்தில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவிக்காததால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காவல்துறை அனுமதி காரணமாக லியோ டிரெய்லர் சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது டிரெய்லர் வெளியிடும் நேரம் குறித்து எவ்வித தகவலும் இல்லாததால் ரசிகர்கள் குழப்பத்தில் சிக்கி தவித்தனர்.
இதனிடையே மாலை 6.30 மணிக்கு லியோ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளுடன் வெளியாகியுள்ள லியோ படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“