லியோ டிரெய்லர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம் 2 வாரங்களில் வெளியாக உள்ள நிலையில்,படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Advertisment
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது 5-வது படமாக விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் லியோ படம் வரும் அக்டோபர் 19-ந் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. டிரெய்லரின் தொடக்கத்தில் ஒரு சீரியல் கில்லர் பற்றிய கதையை சொல்லும் விஜய், ரவுடிகளிடம் இருந்து தப்பிச்செல்ல முயற்சிக்கும் பல காட்சிகள் வருகிறது. ஒரு கட்டத்தில் என் குடும்பத்தை ஏன் தாக்குறீங்க என்று கேட்டு ஆக்ஷனில் இறங்குகிறார்.
அதனைத் தொடர்ந்து டிரெய்லர் ஆக்ஷன் அதளகமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், கடைசியில் இதுக்குமேல சொல்லனும்தா லியோ தான் உயிரோட வந்து சொல்லலும் என்று கௌதம்மேனன் பேசுவதுடன் டிரெய்லர் முடிவடைகிறது. 2.43 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்ட இந்த டிரெய்லர் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே இடம் பெற்றுள்ள நிலையில், லியோ மற்றும் பார்த்தீபன் என இரு கேரக்டரில் விஜய் நடித்துள்ளது தெரிகிறது.
மேலும் 2005-ம் ஆண்டுணு ஹாலிட்டில் வெளியான தி ஹிஸ்ரி ஆஃப் வைலன்ஸ் என்ற படத்தை தழுவி தான் லியோ படம் உருவாகி வருவதாக செய்திகள் வெளியாகி இருந்த நிலையில், இந்த டிரெய்லரை பார்க்கும்போது அது உண்மைதான் என்பது தெரியவருகிறது. ஆனாலும் அதிரடி ஆக்ஷனுடன் கூடிய இந்த லியோ டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.