New Update
/
நடிகர் விஜயின் தங்கை வித்யா சிறுவயதிலேயே இறந்துவிட்ட நிலையில், சமீபத்தில் விஜயின் அம்மா ஷோபா ஒரு குழந்தையை கையில் வைத்துக்கொண்டு என் மகள் வித்யா போலவே இருக்கிறாள் என்று கொஞ்சும் வீடியோ பதிவு தற்போது வெளியாகி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் விஜய். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள இவர், படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருப்பார். ஷாட் ஓகே என்று சொல்லிவிட்டால் உடனடியாக அந்த கேரக்டராகவே மாறிவிடுவார் என்று இவரை பற்றி பல தகவல்கள் வெளியாகி வருவது வழக்கமான ஒன்று. அனைவருடனும் அன்பாக பழகும் குணம் இருந்தாலும் விஜய், யாருடனும் அதிகம் பேசமாட்டார் என்ற தகவலும் இருக்கிறது.
விஜயின் இந்த நிலைக்கு காரணம் அவரது தங்கையின் இறப்புதான் என்று தகவல்கள் உள்ளது. வித்யா என்ற விஜயின் தங்கை சிறுவயதாக இருக்கும்போதே இறந்துவிட்டார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய விஜயின் அம்மா ஷோபாவின் தங்கை ஷீலா (பாண்டியன் ஸ்டோர்ஸ் அம்மா) நான் 10-ம் வகுப்பு படிக்கும்போது எனக்கு அக்கா ஷோபாவுக்கு விஜய் பிறந்தார். அவரை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறியிருந்தார்.
விஜயை அவரது வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்திருந்தாலும் விஜய்க்கு பிடித்தது அவரது தங்கை வித்யா தான். ஆனால் சிறுவயதில் வித்யா இறந்தது விஜயின் மனதில் ஆறாத தழும்பாக மாறிவிட்டது. இந்த இறப்பை ஏற்றுக்கொள்ள முடியாத விஜய், தங்கையை நினைத்து ரொம்பவே வருத்தப்படுவார். விஜய்க்கு இப்போது அவரின் தங்கை நினைவுகள் அதிகமாக இருக்கிறது என்று நடிகை ஷீலா கூறியிருந்தார்.
இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில், கலந்துகொண்ட ஷோபாவிடம் விஜய் ரசிகர் ஒருவர் தனது குழந்தைக்கு பெயர் வைக்குமாறு கூறியுள்ளார். அந்த குழந்தையை பார்த்து கண் கலங்கிய ஷோபா, எனது மகள் வித்யா போலவே இருக்கிறாள். இந்த குட்டிப்பாப்பாவை போலத்தான் எனது மகள் வித்யாவும் இருப்பாள் சொல்லி அந்த குழந்தைக்கு வித்யா என்று கண்கலங்க பெயர் வைத்துள்ளார்.
இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், விஜய் தங்கை வித்யா சாகவில்லை. மீண்டும் பிறந்திருக்கிறார், மீண்டும் விஜயுடன் சேர்ந்திருக்கிறார் என்று, ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.