/indian-express-tamil/media/media_files/2025/09/18/vijay-rajinikanth-2025-09-18-08-07-26.jpg)
தமிழ் சினிமாவில், தற்போது சூப்பர் ஸ்டார் யார் என்பதில் ரஜினிகாந்த் – விஜய் ரசிகர்களிடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில், விஜய் படத்தில் வரும் இந்த குறிப்பிட்ட பாட்டை சொல்லி அதேபோல் இந்த படத்திற்கும் வேண்டும் என்று ரஜினிகாந்த் படத்திற்கு கேட்டு வாங்கியுள்ளார் ஒரு இயக்குனர்.
1975-ம் ஆண்டு அபூர்வ ராகங்கள் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ரஜினிகாந்த் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தொடக்கத்தில் ஒரு சில படங்களில் வில்லன் கேரக்டரில் நடித்திருந்த இவர், ஒரு கட்டத்தில் ஹீரோவாக முத்திரை பதித்து சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார். சமீபததில் திரையுலகில் தனது 50-வது ஆண்டை நிறைவு செய்து ரஜினிகாந்த் நடிப்பில், வெளியான கூலி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.
ரஜினிகாந்த் முன்னணி நடிகராக பல வெற்றிப்படங்களை கொடுத்த 90-காலக்கட்டத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் தளபதி விஜய். ஆரம்பத்தில் ஓரளவு வெற்றிப்படங்களை கொடுத்த இவர், அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களில் படங்களில் நடித்து தன்னை ஒரு முன்னணி நடிகராக நிலை நிறுத்திக்கொண்டார். ஒரு கட்டத்தில் ரஜினிகாந்துக்கே டஃப் கொடுக்கும் வகையில், வசூலில் அதகளம் செய்த விஜய், தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்தார். இவரது படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் குறை வைக்காது என்று சொல்வார்கள்.
அந்த அளவிற்கு, வெற்றியை நிலைநாட்டிய விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று முன்னணி நடிகர்கள் சிலர் மேடையிலேயே கூறியிருந்தனர். இதனால் விஜய் – ரஜினி ரசிகர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்ட நிலையில், இருவரும் சமூகவலைதளங்களில் கடுமையான விமர்சனங்களை கூறியிருந்தனர். ரஜினிகாந்த் கூட தனது பட விழாவில், காக்கா கழுகு கதை சொன்னது விஜயை குறிப்பிட்டு தான் சொன்னார் என்று பலரும் கூறி வந்தனர். தற்போது விஜய் கட்சி தொடங்கி அரசியல் தலைவராக உருவெடுத்துள்ளார்.
அதேபோல் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தின்படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வரும் நிலையில், ரஜினிகாந்த் படத்தை இயக்கிய ஒரு இயக்குனர் அந்த படத்திற்காக விஜய் படத்தில் வரும் ஒரு பாடலை குறிப்பிட்டு இதேபோன்ற ஒரு பாடல் வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை. பி.வாசு தான். ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்திற்காக தான் அந்த பாடலை கேட்டுள்ளார். கடந்த 2005-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான மெகாஹிட் படம் தான் சந்திரமுகி. இந்த படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.
படத்தின் பாடல்களுக்காக அவரை சந்தித்த இயக்குனர் பி.வாசு, விஜய் படத்தில் வரும் ‘அழகூறில் பூத்தவளே’ என்ற பாடல் போன்று எனக்கு ஒரு பாடல் வேண்டும் என்று கூறியுள்ளார். அதற்காக அதேபோல் பல பாடலை வித்யாசகர் கொடுக்க, பி.வாசுவுக்கு திருப்தி இல்லை. கடைசியாக ஒரு பாடலை போட்டுள்ளார். இந்த பாடல், சில இயக்குனர்கள் வேண்டாம் என்று சொன்னது. என்று கூறி ப்ளே செய்துள்ளார். அந்த பாடல் தான் சந்திரமுகி படத்தில் வரும் ‘கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம்’ பாடல். இதை பி.வாசுவே ஒரு மேடையில் கூறியுள்ளார்.
சந்திரமுகி படத்தில் வரும் இந்த பாடலும், விஜய் நடிப்பில், 2003-ம் ஆண்டு வெளியான திருமலை படத்தில் வரும் ‘அழகூறில் பூத்தவளே’ பாடலும் ஒரே மாதிரியான டியூனாகத்தான் இருக்கும். இந்த படத்தில் ஜோதிகா தான் நாயகி. சந்திரமுகி படத்தில் ஜோதிகா முக்கிய கேரகடரில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.