/indian-express-tamil/media/media_files/2025/07/06/vijay-sangeetha-2025-07-06-13-30-59.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து தற்போது அரசியல் கட்சி தொடங்கி ஒரு அரசியல் தலைவராக வலம் வரும் தளபதி விஜய், வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். இது ஒரு பக்கம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தாலும், மறுபக்கம், விஜய் தனது மனைவியை பிரிந்துவிட்டார், அவர் இப்போது தனியாகத்தான் இருக்கிறார் என்ற தகவல்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து அவர்களின் குடும்ப நண்பர் சாந்தி கண்ணப்பன் விளக்கம் அளித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னாளில் ஹீரோவாக உயர்ந்த விஜய், தொடக்கத்தில் கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனாலும் அந்த விமர்சனங்களை சவாலாக எடுத்துக்கொண்டு, நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வெற்றிகளை குவித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். அதேபோல் தனது ரசிகையாக இருந்த சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்ட விஜய்க்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
விஜய் மகன் சஞ்சய் தற்போது சந்தீப் கிஷான் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். அதே சமயம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய், வரும் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். விஜயின் அரசியல் நகர்வு ஆளும் தி.மு.க.வுக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் தலைவர்கள், அரசியல் விமர்சனங்கள் கூறி வந்தாலும், விஜய் பின்னால் அவ்வப்போது ஒரு சர்ச்சையும் சுற்றி வந்துகொண்டு இருக்கிறது.
விஜய் தனது மனைவி சங்கீதாவை பிரிந்துவிட்டார், தற்போது சங்கீதா லண்டனில் உள்ளார் என்று கூறி வருகின்றனர். அதேபோல். கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு, விஜய் த்ரிஷாவுடன் தனி விமானத்தில் கோவா சென்றது உள்ளிட்ட நிகழ்வுகள் குறித்து சர்ச்சை கருத்துக்களை இணையத்தில் பரப்பி வருகின்றனர். இதனால், விஜய்யை பிடிக்காதவர்கள் இந்த தகவல்களை கடுமையாக வைரலாகி வரும் நிலையில், இந்த தகவல்கள் உண்மையா? விஜய் தனது மனைவியை பிரிந்துவிட்டாரா என்பது குறித்து அவர்களின் குடும்ப நண்பர் ஜெயந்தி கண்ணப்பன் வாவ் தமிழா யூடியூப் சேனவலில் அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் சுயமாக சிந்திக்கக்கூயவர். அவ்வளவு விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறார். சங்கீதா ரொம்ப அமைதியாக அழகான குடும்ப தலைவி. அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பார். அவரால், அவரது மாமனார் மாமியார் என யாருக்கும் எந்த தொந்தரவும் கிடையாது. விஜயின் சினிமா வாழ்க்கையில் கூட இப்படி செய்யுங்கள் என்று எந்த ஆலோசனையும் சொல்லமாட்டார். எனக்கு தெரிந்தவரை, அவர் அமைதியான ஒரு நபர்.
மிகவும் நெருக்கமானவர்களிடம் தான் அவர் அதிகம் பேசுவார்.
புகழ்பெற்ற ஒரு நடிகரின் மனைவி எப்படி இருக்க வேண்டுமோ அப்படித்தான் இருக்கிறார். தற்போது தனது மகளின் படிப்புக்காக சங்கீதா வெளியூரில் இருக்கிறார். நிறைய தம்பதிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால் வாழக்கையில் பிரிந்து போற தம்பதி இவர்கள் இல்லை. எந்த காலக்கட்டத்திலும் குழந்தைகளையும் மனைவியும் பிரிய வேண்டும் என்று விஜய் நினைக்கமாட்டார் என்று கூறியுள்ளார்.
மேலும், கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு விஜய் த்ரிஷாவுடன் சென்றார் என்ற செய்திகள் வெளியாகி இருக்கிறது. இதுவெல்லம் ஒரு செய்தியே இல்லை. இருவரும் சினிமாவில் இருக்கிறார்கள். சக நடிகை திருமணம். இதற்கு ஒன்றாக செல்வதை தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது. தன்னுடன் நடித்த நடிகைக்கு திருமணம், அதை தனது சக நடிகையுடன் விஜய் கலந்துகொண்டார் அவ்வளவு தான் என்று கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.