விஜய் சேதுபதியின் 50-வது படம் என்ற அடையாளத்துடன் வெளியாகி இந்த வருடத்தின் பெரிய பிளாக்பஸ்டர் படமாக மாறிய மகாராஜா படம் வசூலில் ரூ150 கோடியை எட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான படம் மகாராஜா. நாயகி இல்லாத இந்த படத்தில் விஜய் சேதபதியுடன், நட்டி நடராஜ், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், நேற்று (ஜூன் 14) இந்த படம் பிரம்மாண்டாக வெளியானர்.
விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் மகாராஜா படம் இந்த ஆண்டில் பெரிய ஓப்பனிங் பெற்ற 3-வது படமாக மாறியது. ஒடிடி தளத்தில் வெளியான பின்னரும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த மகாராஜா திரைப்படம் ரூ100 கோடி வசூலித்து சாதனை படைத்தது. மேலும், நெட்ஃபிளக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியான மகாராஜா 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த்து.
மேலும், மகாராஜா திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகவும், விஜய் சேதுபதி நடித்த கேரக்டரில், அமீர்கான் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே சமீபத்தில் மகாராஜா திரைப்படம் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வரும் நவம்பர் 29-ந் தேதி வெளியானது. தமிழகத்தை போலவே சீனாவிலும் மகாராஜா படத்திற்கு அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்த்து.
இந்நிலையில், சீனாவில் வசூல் வேட்டை நடத்திய மகாராஜா திரைப்படம் உலகளவில் ரூ150 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் மகாராஜா திரைப்படம் தமிழ் சினிமாவில் 2024-ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“