/indian-express-tamil/media/media_files/szQ6MrvbF2cfF8CK7sBN.jpg)
மகாராஜா படத்தில் விஜய் சேதுபதி
விஜய் சேதுபதியின் 50-வது படம் என்ற அடையாளத்துடன் வெளியான மகாராஜா திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், நடப்பு ஆண்டில் முதல்நாளில் பெரிய ஓப்பனிங் பெற்ற 3-வது திரைப்படம் என்ற பெயரை பெற்றுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி நடிப்பில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான படம் மகாராஜா. நாயகி இல்லாத இந்த படத்தில் விஜய் சேதபதியுடன், நட்டி நடராஜ், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில், நேற்று (ஜூன் 14) இந்த படம் பிரம்மாண்டாக வெளியானர்.
விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வரும் மகாராஜா படம் இந்த ஆண்டில் பெரிய ஓப்பனிங் பெற்ற 3-வது படமாக மாறியுள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் வெளியான இந்த படத்தில் நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்ததே படத்தின் முதல் நாள் வசூலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்தியில் வெளியாகாத மகாராஜா திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் மட்டுமே வெளியானது.
வெளியான முதல் நாளான ஜூன் 14 அன்று இரவுக்காட்சியில், 43 சதவிகிதம் ஆக்கிரமிப்பைப் பதிவுசெய்த மகாராஜா மவுத்டாக் மூலம் அடுத்தடுத்த நாட்களில் ஆக்கிரமிப்பை அதிகரித்தது. தெலுங்கில் மகாராஜா இரவுக் காட்சிகளில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் ஆக்கிரமிப்பைப் பதிவு செய்ததால் வலுவாக இருந்தது. முதல் நாளில் 4.50 கோடி ரூபாய் வசூல் செய்த மகாராஜா திரைப்படம் இன்றும் நாளையும் சனி ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால், மேலும் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
A year ago on #Maharaja shooting spot
— Nithilan Saminathan (@Dir_Nithilan) June 15, 2024
@VijaySethuOffl #Maharaja#VJS50pic.twitter.com/DnwiT9xHxP
மேலும் திங்கள் கிழமை பக்ரீத் விடுமுறை என்பதால், மகாராஜா வெளியான முதல் மூன்று நாட்களில் இப்படம் 20 கோடி ரூபாய் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, படத்தின் இரண்டாம் நாள் கிட்டத்தட்ட 8 கோடி ரூபாய் வசூலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோய் மோயின் கூற்றுப்படி, தமன்னா பாட்டியா மற்றும் ராஷி கன்னா நடிப்பில் வெளியான அரண்மனை 4 (ரூ. 4.65 கோடி) மற்றும் தனுஷின் கேப்டன் மில்லர், முதல் நாளில் ரூ. 8.80 கோடி வசூலித்த பிறகு, இந்த ஆண்டின் மூன்றாவது பெரிய தமிழ் ஓப்பனர் மகாராஜா படம் தான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.