தலைவன் தலைவி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள வெப் தொடருக்கான டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வெப் தொடரை காக்காமுட்டை படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கி வருகிறார்.
தமிழ் சினிமாவில் கடந்த 2015-ம் ஆண்டு தனுஷ் வெற்றிமாறன் கூட்டணி தயாரிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படம் காக்கா முட்டை. ஒரு பீட்சா வாங்குவதற்ககா 2 சிறுவர்கள் செய்யும் செயல்களை அடிப்படையாக வைத்து இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. யோகிபாபு மற்றும் ரமேஷ் திலக் முக்கிய கேரக்ரில் நடித்திருந்தனர். இந்த படம் பெரிய வரவேற்பை பெற்று தேசிய விருதுகளை வாங்கியிருந்தது.
காக்கா முட்டை படததிற்கு பிறகு மணிகண்டன், கிருமி என்ற படத்திற்கு கதை எழுதியிருந்தார், தொடர்ந்து விதார்த் நடித்த குற்றமே தண்டனை, விஜய் சேதுபதி நடிப்பில் ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களை இயக்கியிருந்தார். இறுதியாக கடந்த 2022-ம் ஆண்டு கடைசி விவசாயி என்ற படத்தை இயக்கினார். நல்லாண்டி என்ற விவசாயி இந்த படத்தில் தனது எதார்த்த நடிப்பை வழங்கி பெரிய வரவேற்பை பெற்றிருந்தார். விஜய் சேதபதி படத்தில் ஒரு முக்கிய கேரக்டரான நடித்தார். இந்த படமும் தேசிய விருதை வென்றிருந்தது.
கடைசி விவசாயி படத்தை தொடர்ந்து மணிகண்டன் அடுத்து எந்த படத்தை இயக்க போகிறார் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், ஹாட்ஸ்டாருக்காக ஒரு வெப் தொடரை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதியே தயாரித்து வரும் இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்த நேற்று படத்தின் டப்பிங் பணி துவங்கியதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வெப் தொடருக்கான டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 'முத்து என்கிற காட்டான்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக புதிய போஸ்டருடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது கிராமத்து பின்னனியில் உருவாகும் பெரிய பட்ஜெட் வெப் தொடரான இதில், முக்கிய கேரக்டரில், பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் மற்றும் நடிகர் யோகி பாபு நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மணிகண்டன் கூட்டணி 3-வது முறையாக இணைந்துள்ளது.
அதேபோல் பெண் என்ற சன்டிவி சீரியலில் நடித்திருந்த விஜய் சேதுபதி, நவரசா எந்த ஆந்தாலஜி படத்தில் நடித்திருந்தார். இந்தியில் ஃபார்சி என்ற வெப் தொடரில் நடித்த விஜய் சேதுபதி நடிக்கும் 2-வது வெப் தொடர் முத்து என்கிற காட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.