Advertisment

பாண்டிச்சேரியில் மகாராஜா படப்பிடிப்பு... விஜய் சேதுபதியை காண திரண்ட ரசிகர்கள்

ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கியுள்ளது

author-image
WebDesk
Jul 04, 2023 16:56 IST
New Update
Vijay Sethupathi

பாண்டிச்சேரியில் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா படம்  புதுச்சேரியில் ஐயங்கொட்டி பாளையம் மெயின் ரோட்டில் ரூபாய் 15 லட்சத்தில் செட் அமைக்கப்பட்டு ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்த சூட்டிங் 10 நாட்களுக்கு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

Advertisment

புதுச்சேரியில் நாளுக்கு நாள் சினிமா சூட்டிங் அதிகம் நடந்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஜினி நடித்த ஜெயிலர், லால் சலாம், தம்பி ராமையா, சக்தி , மகேஸ்வரன் தேவதாஸ் தயாரிப்பில் ஒரு படம் , பிரபுதேவா நடிக்கும் படம் என தொடர்ந்து புதுச்சேரி பகுதியில் தமிழ் சினிமா துறையினர் தினந்தோறும் படையெடுத்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார்.  ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் முதல் புதுச்சேரி அதன் சுற்றுப்பகுதியில் நடத்த முடிவு செய்து இருந்தனர். ஆனால் புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக கனமழையால் சூட்டிங் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், இன்று மீண்டும் படப்பிடிப்பு தூங்கியது.

புதுச்சேரியில் இருந்து அய்யங்குட்டி பாளையம் பீர் ஃபேக்டரி அருகே ரூபாய் 15 லட்சத்தில் தனி வீடு செட் அமைக்கப்பட்டு அதில் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த விஜய் சேதுபதியை  காண ஏராளமான பொதுமக்கள் காண வந்திருந்தனர். இதனால் போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டது.

சினிமா துறை பிஆர்ஓ குமரன் தலைமையில் போக்குவரத்தை சரி செய்யப்பட்டதை தொடர்ந்து சூட்டிங் நடந்தது. இந்த படத்தை படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய மித்தின் இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் தினேஷ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் சுதன் ஆகியோர் செய்து வருகின்றனர். ஒரு கடையில் விஜய் சேதுபதி வெளியே பார்த்து வேடிக்கை பார்ப்பது போன்று படம் பிடிக்கப்பட்டது

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Vijay Sethupathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment