கமல்ஹாசன் தயாரிப்பில் கவின்
சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். ஒரு சில படங்களில் முக்க்கிய கேரக்டரில் நடித்த இவர், நட்புன்னா என்னானு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து லிப்ட் படத்தில் நடித்தார். இந்த படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் கவின் நடிப்பில் வெளியான டாடா படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ள நிலையில்’ வசூலில் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தை பாராட்டிய நடிகர் கமல்ஹாசன், தனது தயாரிப்பில் கவின் ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சச்சின் டெண்டுல்கரை சந்தித்த சூர்யா
விக்ரம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 42-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூர்யா தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுக்ரை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விக்னேஷ் சிவனின் அடுத்த ஹீரோ யார்?
துணிவு படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் கதையில் திருப்தியடையான தயாரிப்பு நிறுவனமான லைகா படத்தில் இருந்து விக்னேஷ் சிவனை வெளியேற்றியது. ஆனால் நயன்தாராவை இந்த படத்தில் நாயகியாக நடிக்க வேண்டும் என்று விக்னேஷ் சிவன் உறுதியாக இருந்ததால் தான் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனிடையே அஜித் நடிக்க இருந்த கதைக்காக தற்போது விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதியை அனுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான நிலையத்தில் ஜிம் வேண்டும் – ராஷ்மிகா மந்தனா
கார்த்தியின் சுல்தான், விஜயின் வாரிசு ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ராஷ்மிகா மந்தனா தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், விமான நிலையத்தில் ஏன் ஜிம் இல்லை. நான் எப்போதெல்லாம் விமான பயணம் செல்கிறேனோ அப்போதெல்லாம் 2 மணி நேரத்திற்கு முன்பாக விமான நிலையம் வந்துவிடுகிறேன். விமானம் வரும் வரை ஏதாவது யோசித்துக்கொண்டிருப்பேன். அதே நேரம் அங்கு ஜிம் இருந்தால் உடற்பயிற்சி செய்துகொள்ளலாம் என்று குறிப்பிட்டுளளார்.
ஆயிரத்தில் ஒருவன் 2 குறித்து செல்வராகவன் பதில்
முன்னணி இயக்குனராக இருந்த செல்வராகவன் தற்போது பகாசூரன் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த படம் நாளை (பிப்ரவரி 17) வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் 2 படம் குறித்து பேசியுள்ளார். இதில், ஆயிரத்தில் ஒருவன் 2-ம பாகத்திற்கான வேலை நடந்து வருகிறது. விரைவில் அறிவிப்பு வரும் என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil