Advertisment

உதயநிதிக்கு பதிலாக விஜய் சேதுபதி... தமன்னாவின் ஆடை வைரல்... டாப் 5 சினிமா

ஜனவரி 12-ந் தேதி விஜயின் வாரிசு படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24-ந் தேதி மாலை நடைபெற உள்ளது

author-image
WebDesk
New Update
உதயநிதிக்கு பதிலாக விஜய் சேதுபதி... தமன்னாவின் ஆடை வைரல்... டாப் 5 சினிமா

வாரிசு இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கும் பிக்பாஸ் பிரபலம்

Advertisment

தமிழ் சினிமாவின் முனனணி நடிகரான விஜய் நடிப்பில் தற்போது தயாராகி வரும் படம் வாரிசு. பொங்கள் தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 12-ந் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 24-ந் தேதி மாலை நடைபெற உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியை பிக்பாஸ் பிரபலம் ராஜூ ஜெயமோகன் தொகுத்து வழங்க உள்ளார்.

உதயநிதிக்கு பதிலாக விஜய் சேதுபதி

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உதயநிதி நாயகனாக நடிக்கும் படம் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது உதயநிதி அமைச்சராகிவிட்டதால் தான் இனிமேல் படங்களில் நடிக்கப்போதில்லை என்று அறிவித்துவிட்டார். இதனால் அந்த படத்தில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், உதயநிதி கேரக்டரில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

ரசிகர்கள் விமர்சிக்கும் தமன்னாவின் ஆடை

நடிகைகள் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும்போதும் வித்தியாசமான உடையில் வருவார்கள். இதற்காக காஸ்யூம் டிசைனர்கள் இருப்பார்கள். அந்த வகையில் தற்போது நடிகை தமன்னா நிகழ்ச்சி ஒன்றில் களந்துகொள்ள வந்தபோது, ஒரு நிறங்களில் உள்ள பேண்ட் அணிந்து வந்தது கவனம் ஈர்த்துள்ள நிலையில், தமன்னாவின் டெய்லர் யார் என்று ரசிகர்கள் விமர்சித்தும் வருகின்றனர்.

நாய் சேகர் ரிட்டன்ஸ் எவ்வளர் வசூல்?

நடிகர் வடிவேலு நடிப்பில் சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு வெளியான படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். ஆனந்தராஜ், ரெட்டின் கிங்ஸ்லீ ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் வெளியாகி 8 நாட்களை கடந்துள்ள நிலையில் இதுவரை 7.70 கோடி ரூபாய் கலெக்ட் செய்துள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவதார் படம் வசூல் அப்டேட்

கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அவதார் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 13 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அவதார் படத்தின் 2-ம் பாகம் கடந்த வாரம் வெளியானர். பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அவதார் 2 3 நாட்களில் உலகளவில் 3500 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment