இவ்ளோ சிம்பிளா ஒரு காதலை சொல்ல முடியுமா? விஜய் சேதுபதியை வியக்க வைத்த பாண்டியராஜன் படம்!

பாண்டியன், சீதா, ரேவதி, ஜனகராஜ், வி.கே.ராமசாமி, கொல்லங்குடி கருப்பாயி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், தமிழ் சினிமாவில் கல்ட் க்ளாசிக் படங்களில் ஒன்றாக இன்றுவரை நிலைத்திருக்கிறது.

பாண்டியன், சீதா, ரேவதி, ஜனகராஜ், வி.கே.ராமசாமி, கொல்லங்குடி கருப்பாயி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், தமிழ் சினிமாவில் கல்ட் க்ளாசிக் படங்களில் ஒன்றாக இன்றுவரை நிலைத்திருக்கிறது.

author-image
WebDesk
New Update
Pandiyarajan vijay sethupath

தமிழ் சினிமாவில், வித்தியாசமான படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ள விஜய் சேதுபதி, நடிகர் மற்றும் இயக்குனரான பாண்டியனராஜன் நடிப்பில் வெளியான ஆண் பாவம் படம் தன்னை மிகவும் வியக்க வைத்த படங்களில் ஒன்று என்று சொல்லி, அதில் வரும் சீன் ஒன்றையும் எடுத்துக்காட்டாக கூறியுள்ளார்.

Advertisment

இயக்குனர் பாக்யராஜூவிடம் உதவி இயக்குனராக இருந்த பாண்டியராஜன், 1985-ம் ஆண்டு வெளியான கன்னிராசி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பிரபு,ரேவதி, கவுண்டமணி, ஜனகராஜ், சுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றியை கொடுத்து. இந்த படத்தை தொடர்ந்து அதே ஆண்டு, பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான படம் தான் ஆண்பாவம். முதல் படத்தில் நடிக்காத இவர், 2-வது படத்தில் ஹீரோவாக அறிமுகமானார்.

பாண்டியன், சீதா, ரேவதி, ஜனகராஜ், வி.கே.ராமசாமி, கொல்லங்குடி கருப்பாயி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படம், தமிழ் சினிமாவில் கல்ட் க்ளாசிக் படங்களில் ஒன்றாக இன்றுவரை நிலைத்திருக்கிறது. கிராமத்து பின்னணியில் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படத்தில், தவறாக பெண் பார்க்க வந்து காதலில் விழுந்து அதன்பிறகு இந்த ஜோடி எப்படி இணைகிறது என்பது தான் இந்த படத்தின் கதை. இதில் பாண்டியன் – பாண்டியராஜன் இருவரும் சகோதரர்களாக நடித்திருந்தனர்.

இந்த படம் வெளியாகி 40 வருடங்கள் கடந்திருந்தாலும், இன்றைய இளைஞர்கள் மத்தியிலும் ஆண்பாவம் படத்திற்கு நல்ல வரவேற்கு இருந்து வருகிறது. இந்த படம் குறித்து பேசிய நடிகர் விஜய் சேதுபதி, பாண்டியராஜன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ஆண் பாவம் படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதில் முக்கியமான 2 விஷயங்கள் உள்ளன. ஒன்று, பாண்டியன் சீதாவை பொண்ணு பார்க்க வரும் காட்சி. இந்த காட்சியை எப்படி சிந்தித்தார் என்று தெரியவில்லை.

Advertisment
Advertisements

மாப்பிள்ளை பொண்ணு உயரம் சரி பார்ப்பார்கள். அப்போது பாண்டியன் சுவற்றில் தனது உயரத்தை குறித்துவிட்டு செல்வார். அதே இடத்தில் வந்து நிற்கும் சீதா, பாண்டியன் அளவுக்கு உயரம் வர வேண்டும் என்பதற்காக எட்டிக்கொண்டு நிற்பார். எத்தனை வசனம் பேசி ஒரு காதலை சொல்லும் பல படங்கள் இருந்தாலும் இந்த ஒரு காட்சியில் இவர்களுக்கு இருக்கும் காதலை சொல்லியிருப்பார். மாப்பிள்ளை பிடித்திருக்கிறது. என்பதை அந்த ஒரு ஷாட்டில் முடித்துவிட்டார்.

ரொம்ப அற்புதமான இன்றுவரை என்னை பிரமிக்க வைக்கும் காட்சி. இவ்வளவு சிம்பிளா ஒரு காதலை சொல்ல முடியுமா என்று தெரியவில்லை என்று விஜய் சேதுபதி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். இந்த மாதிரி பல காட்சிகள் இந்த படத்தில் உள்ளதால் தான் காலம் கடந்தும் இந்த படம் பேசப்படக்கூடிய ஒரு படமாக நிலைத்திருக்கிறது. 

Vijay Sethupathi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: