Advertisment
Presenting Partner
Desktop GIF

தொகுப்பாளராக விஜய் சேதுபதி: பிக்பாஸ் வீட்டில் நுழைகிறாரா சூர்யா சேதுபதி?

தனது மகன் சூர்யா சேதுபதியை நேராடியாக ஹீரோவாக களமிறக்க நினைத்த விஜய் சேதுபதி, ஃபீனிக்ஸ் என்ற படத்தில் அவரை ஹீரோவாக நடிக்க வைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
surya Sethupathi

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும நிலையில், அவரது மகன் சூர்யா சேதுபதி இந்நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் சிறுசிறு கேரக்டரில் நடித்து தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. அதன்பிறகு பல படங்களில், வில்லன் குணச்சித்திரம், உள்ளிட்ட பல கேரக்டரில் நடித்து முன்னணி நடிகராக உயர்ந்த விஜய் சேதுபதி, பல படங்களில் ஹீரோவாக நடித்தும் முத்திரை பதித்துள்ளார். இவர் ஹீரோவாக நடித்த படங்களை விட வில்லனாக நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெற்றிருந்தன.

சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம் உலகளவில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது பல படங்களை கைவசம் வைத்திருக்கும் இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனை தொகுத்து வழங்கி வருகிறார். தன்னை போல் இல்லாமல் தனது மகன் சூர்யா சேதுபதியை நேராடியாக ஹீரோவாக களமிறக்க நினைத்த விஜய் சேதுபதி, ஃபீனிக்ஸ் என்ற படத்தில் அவரை ஹீரோவாக நடிக்க வைத்துள்ளார்.

சண்டை பயிற்சியாளர் அனல் அரசு இயக்கியுளள் ஃபீனிக்ஸ் படம் நவம்பர் மாதம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகாக, சூர்யா சேதுபதி பிக்பாஸ் வீட்டிற்கு கெஸ்டாக நுழைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது பிக்பாஸ் ப்ரமோ விரைவில் வெளியாகவும் வாய்ப்புள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Vijay Sethupathi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment