விஜய் என்ற வார்த்தை தற்போது வெற்றியை குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. ஒரே ஒரு பிராந்திய மொழியில் நடிக்கும் நடிகர் ஒருவருக்கு உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் அளவுக்கு புகழ் சேர்ந்துள்ளது. இந்த விரும்பக்கதக்க நிலை முன்பு ரஜினிகாந்துக்கு இருந்தது. அதை தற்போது விஜய் முறியடித்துள்ளார். விஜய்ஆனால் அவரது வாழ்க்கையில் இந்த நிலைக்கு எடுத்துக்கொண்ட பயணம் அவ்வளவு எளிதானது அல்ல.
விஜய் தந்தை, எழுத்தாளர்-இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகர் விஜய்யின் ஆரம்ப கட்ட திரைப்படங்களை வடிவமைத்தவர் (90கள்). அதன்பிறகு விஜய்யின் சொந்த விருப்பமாக (ஸ்கிரிப்ட் தேர்வு) பல்வேறு திரைப்படத் தயாரிப்பாளர்களுடன் (குறிப்பாக இந்த திரைப்படத்தில்) பணியாற்ற வழிகாட்டினர். 90 களின் பிற்பகுதியில் இருந்து 2000 களின் முற்பகுதி வரை) விஜய் பெண்கள் மற்றும் குடும்ப ரசிர்களை பெருமளர் பெற்றார்.
இதில் குறிப்பாக பூவே உனக்காக திரைப்படம் விஜய்க்கு நவீன கால தேவதாஸ் சாயம் இல்லாத ஒரு டெம்ப்ளேட்டை அமைத்தது கொடுத்தது. அதன்பிறகு பிரியமானவளே மற்றும் துள்ளாத மனமும் துள்ளும் படங்களில் நடிகை சிம்ரனுடன் வெற்றி ஜோடி என்று மாறினார். அதேபோல் சூப்பர் ஹிட் காதல் படமான காதலுக்கு மரியாதை, மெகாஹிட் திரைப்படமாக குஷி (ஜோதிகாவுடன்) ஆகிய படங்கள் விஜய்க்கு பெண் ரசிகர்களின் கூட்டத்தை அதிகரிக்க செய்த படங்களாக மாறின. பெண்களின் இதயங்களை வென்ற பிறகு, சிறுவர்கள் எப்படி பின்தங்கியிருக்க முடியும்?
2003-ம் ஆண்டு, விஜய் தனது முதல் 50 கோடி படத்தை கொடுத்தார். தரணியின் இயக்கத்தில் விஜய் த்ரிஷா ஜோடியாக நடித்து வெளியான கில்லி திரைப்படத்தில் “கோபமான இளைஞனாக” விஜய் ஒரு ஆகஷன் ஹீரோவா தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை அடித்து நொறுக்கியது. கில்லி வெளியாகி இரண்டு தசாப்தங்களில் விஜய்யின் வாழ்க்கையில் முதல் மைல்கல் படமாக இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இந்த படத்திற்குப் பிறகு விஜய் ஒரு “மாஸ் ஹீரோ” ஆக மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டார். மகேஷ் பாபு நடித்த ஒரிஜினல் தெலுங்கு படமான ஒக்கடுவை விட கில்லி பாக்ஸ்ஆபீசில் பெரிய வசூல் வேட்டை நடத்தியது.
Thank you Neyveli pic.twitter.com/cXQC8iPukl
— Vijay (@actorvijay) February 10, 2020
அதனைத் தொடர்ந்து விஜய்க்கு மசாலா பட டெம்ப்ளேட்டையும் கொடுத்தது. கில்லியைத் தொடர்ந்து வந்த படங்களில் ஏராளமான நகைச்சுவை, காதல் மற்றும் பெரிய வில்லன் (பெரும்பாலும் பிரகாஷ் ராஜ்) இருந்தது. விஜய் மற்றும் த்ரிஷா முக்கிய ஜோடியை கில்லி படம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. அனபிறகு ஆதி, குருவி, திருப்பாச்சி உள்ளிட்ட படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் த்ரிஷா விஜயுடன் 5-வது முறையாக இணைந்துள்ளார்.
விஜய் மற்றும் த்ரிஷாவின் தற்போதைய படமான லியோவின் படப்பிடிப்புக்கு முந்தைய விளம்பரங்கள் மூலம், தமிழ் சினிமாவில் வழக்கமாக இருப்பது போல, விஜய் தனது பெயருக்கு ஒரு சின்னப் பெயரையும் வைத்திருக்கிறார். விஜய் தனது வாழ்க்கையின் ஒரு கட்டம் வரை முதலில் “இளைய தளபதி” என்று அழைக்கப்பட்டார். கில்லிக்குப் பிறகு, விஜய் தொடர்ந்து வெளிவந்த பல சூப்பர்ஹிட்களுடன், அவர் “இளையா”வை விட்டுவிட்டு “தளபதி” என்று மாறியது.
இது குறிப்பாக அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் படத்தில் இருந்து விஜய் தளபதி என்று அழைக்கப்படுகிறார். (இது பிரபலமான ரஜினிகாந்த்-மணிரத்னம் படத்தின் பெயரும் கூட) தற்போது தயாரிப்பாளர்கள் விஜய்யிடம் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்., ஏனெனில் அவரது தோல்வி படங்களும் (சுரா அல்லது வேலாயுதம் என்று சொல்லலாம்) தயாரிப்பாளர்களுக்கு வசூல் ரீதியான வெற்றியை கொடுத்துள்ளது. ஒரு விஜய் படம் சாட்டிலைட் டிஆர்பி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு சான்றாக இருக்கும் (இப்போது அதுவும் அதிக எண்ணிக்கையில் உள்ள ஓடிடி பார்வைகள் தான்). விஜய்யின் திரைப்படங்கள், அது ஹிட்டாக இருந்தாலும் சரி, தோல்வியாக இருந்தாலும் சரி, அதில் எப்போதும் சிறந்த பாடல்கள் இருக்கும், அவற்றில் அவரது நடனங்கள் அவரது அதிரடி ஆக்ஷன் காட்சிகள் கவர்ந்திழுக்கும். சினிமாவிலும் நிஜ வாழ்க்கையிலும், ஒரு ஹீரோ எண்ணற்ற தடைகளால் சூழப்பட்டிருக்கும்போது விஜய் தன்னை வலிமையானவராக வெளிப்படுகிறார்.
காவலன் (அசினுக்கு ஜோடியாக அவர் நடித்த மலையாள ரீமேக்) மூலம் விஜய் தனது முதல் அரசியல் தடையை எதிர்கொண்டார். அன்றைய அதிமுக அரசின் தடை உத்தரவு மற்றும் நிதி சிக்கல்களால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. அதேபோல் அவரது தலைவா படமும் அரசியல் சிக்கல்களை எதிர்கொண்டது. இந்த பின்னடைவுகளுக்குப் பிறகு விஜய் தனது ரசிகர் மன்றங்களைப் பயன்படுத்தத் தொடங்கினார், அதன்பிறகு ஏதேனும் தடைகள் இருந்தபோதிலும் தனது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்துவரை விஜய் உறுதிசெய்தார்.
சமீபத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு (2020) முன்பு, வெளியான விஜய்யின் மாஸ்டர் படப்பிடிப்பின் போது அவரது வீட்டில் ஐடி ரெய்டு நடந்தது. ஒரு கேரவனின் மேல் விஜய் தன்னைச் சுற்றியிருந்த ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட ஒரு படம், இணையத்தில் வைரலாக பரவிய நிலையில், அதன்பிறகு ரெய்டு செய்தி வெளியானது. விஜய் இன்று இருக்கும் அதிகார மையத்திலிருந்து விலகி, விஜய்யை குதிக்க வைத்த மைல்கல் திரைப்படங்கள் கில்லி, போக்கிரி, துப்பாக்கி, கத்தி மற்றும் தெறி.
ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தில் 3 இடியட்ஸ் படத்தில் அமீர் கானின் பாத்திரத்தை விஜய் ஏற்று நடித்திருந்தார். அந்த படம் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், விஜய் என்ற ஒரு அற்புதமான நடிகர் மீண்டும் தன்னை நிரூபித்திருந்தார். தற்போதுவரை நண்பன் படம் பல இளைஞர்கள் மத்தியில் ஒரு இன்ஸ்பிரேஷனாக உள்ளது. போக்கிரி (மகேஷ் பாபு ரீமேக்) என்பது விஜய்யின் பாக்ஸ் ஆபிஸ் நிலையை உச்சத்திற்கு கொண்டுசென்ற படமாகும்,
மேலும் ஜனவரி பொங்கல் பண்டிகை அவரது படங்களை வெளியிடுவதற்கான அதிர்ஷ்ட நேரமாக அமைந்தது. அவரது சமீபத்திய வாரிசுவும் பொங்கல் வெளியீடாக வெளியானது. மேலும் படம் சராசரி விமர்சனங்களைப் பெற்றாலும், அது ஹிட்டாக உருவெடுத்துள்ளது. விஜய்யைப் பார்த்து பார்வையாளர்கள் எப்படி மகிழ்ச்சி அடைகிறார்கள் என்பதை இது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கிறது, இன்று விஜய்யை இயக்கும் ஒரு திரைப்பட இயக்குனருக்கு சுமை என்னவென்றால், பாக்ஸ் ஆபிஸில் நடிகரின் வசூல் வேட்டையை தொடரக்கூடிய ஒரு தரமான படத்தை வழங்குவதுதான். தற்போது விஜயின் ரீச் தமிழுக்கு அப்பாற்பட்டது மற்றும் வாரிசு மூலம், அவரது படங்கள் இப்போது அதன் டப்பிங் பதிப்புகளின் வசூலில் குறிப்பிட்ட ஒரு பங்கைப் பெறுகின்றன.
ஜி.வி.பிரகாஷ், அனிருத், தமன், டி.இமான், தேவிஸ்ரீ பிரசாத் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற “தேவையுள்ள” இசையமைப்பாளர்களுடன் இணைந்த சாதனையும் விஜய்க்கு உண்டு. விஜய்யின் படங்களில் உள்ள பாடல்கள் அவரது முதன்மையான பார்வையாளர்களுக்கு – 30 வயதிற்குட்பட்ட மற்றும் இளம் வயதினருக்கு அவரது முதன்மை அழைப்பாக உள்ளது. ஹிந்தியில் கான்கள் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரால் மட்டுமே செய்யக்கூடிய ஒரு வணிகத்தை விஜய் தற்போது தனக்கென உருவாக்கியுள்ளார்.
2003 கில்லி ஆண்டு மட்டுமல்ல, தமிழ் சினிமாவுக்கும் அது ஒரு சிறப்பாக ஆண்டு என்றும் சொல்லலாம். விஜய், சூர்யா, மாதவன், அஜீத் போன்ற நடிகர்களுககு தரணி, கௌதம் மேனன், லிங்குசாமி போன்ற அடுத்தடுத்த இயக்குனர்களுடன் சூப்பர் ஹிட் படங்கள் கிடைத்தன. அந்த நேரத்தில்தான் எஃப்எம் ரேடியோ ஸ்பேஸ் ஆரம்பித்து நேரம், கத்திக்குப் பிறகு விஜய்யின் சமூக ஊடக முறையீடு அதிகாரத்திற்கு வந்தது. அப்போது அவரது புகழை மாற்றியது மெர்சல். அவரது பாடல்கள் மற்றும் டிரெய்லர்கள் எவ்வளவு வேகமாகப் பார்வைகளைக் குவிக்கும் என்பதற்கான சாதனை இன்னிங்ஸை அந்தப் படம் உருவாக்கிது.
இது இன்றுவரை நன்றாகவே உள்ளது. விஜய்யின் நிலையை அஜித்தால் எதிர்கொள்ள முடியும். ரசிகர்களின் சண்டைகள் சமூக ஊடகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. மேலும் விஜய் மற்றும் அஜித் இருவருமே பெரிய ஐகான்களை ஒருபோதும் வீழ்த்தாத தனித்துவமான விசுவாசமான ரசிகர்களைக் கொண்டுள்ளனர். ஒரு ஹீரோவின் மறுபிரவேசம் எப்போதுமே அவரது தாழ்வுகளை விட அதிகமாக இருக்கும். விஜய் நடிகரான முதல் தசாப்தத்தில் பல பின்னடைவுகளைக் கண்டார் – பத்திரிகைகள் அவரது தோற்றத்தை விமர்சித்தன, அவரது நடிப்பு விமர்சகர்களால் தடைசெய்யப்பட்டது மேலும் அவரது தந்தை அவரை வைத்து திரைப்படத்தில் இயக்கியதால் நெப்போடிசத்தைப் வளர்ப்பதாக விமர்சித்தனர்.
விஜய் அவரது தந்தை சந்திரசேகர், இயக்கத்தில் ஆரம்பகாலத்தில் விஜயகாந்த் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருடன் குழந்தை நடிகராகவும் டீன் பையனாகவும் நடித்தார் அப்போது நடிகராக இருப்பதற்கான சிறப்புத் திறன்கள் அவருக்கு இல்லை. விஜய் அந்த அனைத்து அம்சங்களிலும் தற்போது உயர்ந்து நிற்கிறார். அதன்பிறகு மற்றும் விரைவாக தனது பாதையை சரிசெய்து தனது மைல்கல்லை திரைப்படங்களை கொடுத்தார். அவர் ஒரு வாக்குச் சாவடிக்கு சைக்கிளில் சென்றலும் அது முக்கிய செய்தியாகிறது. அவரது ஆடியோ வெளியீட்டு உரைகள் அரசியல் நோக்கங்களுக்காக விளக்கப்படுகின்றன. அவரது ரசிகர்கள் மீதான அவரது அன்பும் அவர்களின் பரஸ்பர வெறித்தனமான விசுவாசமும் ஒரு சராசரி படத்தைக் கூட பெரிய லாபம் ஈட்டக்கூடிய படமாக ஆக்குகிறது. இது சக்தி இல்லை என்றால் வேறு என்ன? விஜய் எப்போதும் எளிமையை தனது வலுவான உடையாக அணிவார், அதை அவர் நன்றாக அணிகிறார். அவரது புதிய மைல்கற்களை கிக்ஸ்டார்ட் செய்யும் ஒரு படம்தான் தேவை. லியோ அந்த படமாக இருக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“