/tamil-ie/media/media_files/uploads/2023/06/Gopi-Nath-Neeya-Nana.jpg)
நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கோபிநாத்
நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளர் கோபிநாத்
விஜய் டிவியின் நியா நானா நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு இளைஞர் மனநல சிகிச்சையின்போது எனது ஒரிஜினாலிட்டி போய்விடும். அவர்கள் சொல்வதை போல் நடக்க வேண்டியதாகிவிடும் என்று கூறிய நிலையில், அவருக்கு தொகுப்பாளர் கோபிநாத் கூறிய அறிவுரை இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், அன்றாட வாழ்வில் மனிதன் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளை வைத்து நடத்தப்படும் நீயா நானா நிகழ்ச்சி தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதில் இந்த வார நிகழ்ச்சியில் மனநல மருத்தவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு தரப்பினரும், சிகிச்சை பெற்றுக்கொள்வது வேண்டாத ஒன்று என ஒரு தரப்பினரும் வாதிடுகின்றனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து இந்த வார ப்ரமோ தற்போது வெளியாகி வருகிறது. இதில் இரு தரப்பும் தங்களது தரப்பு விவாதங்களை எடுத்து வைப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், ஒரு ப்ரமோவில் இளைஞர் ஒருவர் பேசியதும், அதற்கு கோபிநாத் பதில் கொடுத்ததும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ப்ரமோவில் ஒரு நபர், எனக்குனு ஸ்பெசிபிக் கேரக்டர் இருக்கிறது. ஆனால் நான் மனநல சிகிச்சைக்கு சென்றால் அவர்கள் சொல்வதை கேட்டு அப்படியே வாழவேண்டிய நிலை ஏற்படும்.
இதனால் நான் இம்போசிஸ் கேரக்டராக மாறிவிடுவேன். என்னுடைய ஒரிஜினல் கேரக்டர் லூஸ் பண்ணிடுவேன் என்று சொல்கிறார். இதை கேட்ட தொகுப்பாளர் கோபிநாத், உங்களுக்கு ஒருவேளை மனநல பிரச்சனை இருக்கும் வச்சிக்கட்டா அப்போ நீங்க இது தப்பு இது சரின்னு ஒருத்தங்க சொன்னா அதை ஃபாலே பண்றது சரிதானே என்று கேட்கிறார். அதற்கு அந்த நபரும் ஆமாம் என்பது போல் தலை ஆட்டுகிறார்.
தொடர்ந்து பேசும் கோபிநாம், என்னுடைய ஒரிஜிலாலிட்டி இதுதான் நான் டென்ஷனானா கொஞ்சம் காண்ட் ஆகிருவேன். இதை மாற்றக்கூடாதுனா எப்படி? தப்புன்னா மாத்தி தானே ஆகனும் என்று சொல்ல அந்த நபர் மீண்மு் இல்ல சார் எனக்குனு ஒரு இன்டிச்சுவல் கேரக்டர் இருக்கு என்று சொல்கிறார். இதை கேட்ட கோபிநாத் உன் இன்டிச்சுவல் கேரக்டர் என்ன சொல்லு என்று கேட்கிறார்.
அதற்கு அந்த நபர், இப்ப வந்து நீங்க இந்த இடத்தில் கோபப்படாத அப்படின்னு சொல்லலாம். ஆனா அதை கண்ட்ரோல் பண்ணனும்னு சொல்து வேற கோபபடக்கூடாது என்று சொல்வது தப்பு தானே சார் என்று கேட்க, நீங்க எந்த ஆளுகிட்ட (மனநல மருத்துவர்) போனதுல நீங்க கோவப்பட கூடாதுன்னு சொன்னாங்கன்னு சொல்லுங்க என்று கேட்கிறார். அதற்கு அந்த நபர் நான் எக்ஸாமிபிளுக்கு சொன்னேன் என்று சொல்கிறார்.
இதை கேட்ட கோபி, இது எக்ஸாம்பில் இல்ல நீங்க அனுமானமா சொல்றீங்க நம்ம ப்ரண்டு தான் கோவப்படக்கூடாது அமைதியா இரு என்று சொல்லுவாங்க என்று கோபிநாத் சொல்ல, அப்போ ப்ரண்டுகிட்ட போறது கூட நம்ம ஒரிஜினாலிட்டியை லூஸ் பண்றது தான சார் என்று அந்த நபர் சொல்ல, கடுப்பான கோபி, உன் ஒரிஜினாலிட்டில தீய வைக்க என்னதான் அப்படி ஒரிஜினாலிட்டி வச்சிருக்க என்று கேட்கிறார்.
கோபிநாத் இவ்வாறு பேசியதை கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் சிரித்துகொண்டிருக்க, அந்த நபர் ஒரு தப்பு நடக்குதுன்னா அதை நார்மலாவே சரி பண்ணிக்கலாம் என்று சொல்ல, அது எல்லா நேரமும் சரிப்பட்டு வராது தம்பி என்று கோபிநாத் சொல்கிறார். ஆனாலும் அந்த நபர், எதனால தப்பு பண்றோம்னு நாமனே அனலைஸ் பண்ணணும் சார் என்று சொல்ல, உங்களுக்கு காய்ச்சல் வந்த அதை நீங்களே கண்டோல் பண்ணிடுவீங்களா என்று கேட்டு கோபிநாத் கேட்கிறார்.
மேலும் ஐஸ்கிரீம் சாப்பிட்டு கூலிங் தண்ணீ குடிச்சா உங்களால சரி பண்ண முடியுமா என்று கேட்க அந்த நபர் என்ன சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறார். அதன்பிறகு கோபிநாத் நீங்க எல்லோருமே சைக்காலஜிஸ்ட் கிட்ட போறவங்க ரொம்ப வீக்கானவங்க என்று நீங்க சொல்ல வரீங்க என்று கேட்கிறார். இந்த ப்ரமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.