சின்னத்திரை ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை கொடுப்பத்தில் விஜய் டிவிக்கு நிகர் இல்லை என்று சொல்லலாம். அந்த வகையில் சீரியல் என்றாலும் ரியாலிட்டி ஷோக்கள் என்றாலும் விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதை தக்கவைத்துக்கொள்ள அவ்வப்போது புதிய நிகழ்ச்சிகளும் வருகின்றன.
மேலும் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், குக் வித் கோமாளி பிக்பாஸ் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் பல சீசன்கள் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் இந்த நிகழ்ச்சிகள் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நிகழச்சிகள் ஹிட்டுக்கு தொகுப்பாளர்களும் ஒரு முக்கிய காரணம் என்று சொல்லலாம்.
மாகாபா ஆனந்த், பிரியங்கா உள்ளிட்டோர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளர்களாக வலம் வருகின்றனர். இதில் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ப்ரியங்கா அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதேபோல் இவர் வெளியூர் டூர் செல்லும் வீடியோ பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகின்றன.
இந்நிலையில், தற்போது ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4-ன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பிரியங்கா வெளியிட்டுள்ள வீடியோ பதிவு வைரலாகி வருகிறது. தன்னுடன் இருக்கும் மேக்கப் ஆர்டிஸ்ட், டிஜே பிளாக், உள்ளிட்ட பலரையும் வீடியோவில் கட்டியுள்ள பிரியங்கா, இந்த ஷோவில் பல்டி அடிக்கிறதை தவிர மற்ற எல்லாம் பண்றோம் என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து இரவு 7 மணிக்கு மதிய உணவை சாப்பிடும் பிரியங்கா அமீர் பாவனி ஜோடி சமைத்து கொடுத்த உணவை சாப்பிடுகிறார். டி.ஜே.பிளாக் இவருடன் இணைந்து சாப்பிடுகிறார். இரவு பகலாக ஷூட்டிங் முடிந்து காலை 6 மணிக்கு இவர்கள் வீட்டுக்கு செல்கின்றனர். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/