scorecardresearch

8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மோதல்: பொங்கலை குறி வைக்கும் விஜய் – அஜித் படங்கள்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் அதிக ரசிகர்கள் பட்டாளங்கள் வைத்துள்ள நடிகர்களில் விஜய் அஜித்துக்கு முக்கிய இடம் உண்டு.

8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மோதல்: பொங்கலை குறி வைக்கும் விஜய் – அஜித் படங்கள்?

Thunivu And Varisu Clash Release In Pongal 2023 : விஜய நடித்து வரும் வாரிசு, மற்றும் அஜித் நடித்து வரும் துணிவு ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் தினத்தில் மோத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் அதிக ரசிகர்கள் பட்டாளங்கள் வைத்துள்ள நடிகர்களில் விஜய் அஜித்துக்கு முக்கிய இடம் உண்டு. இவர்களின் படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவது வழக்கம். அதே சமயம் இவர்கள் இவருவரின் படங்களும் ஒரே நாளில் வெளியானால் அது தமிழகத்திற்கே பெரும் பண்டிகை நாளாகத்தான் இருக்கும்

ஆதி – பரமசிவன்

அந்த வகையில் கடந்த 2006 ம் ஆண்டு விஜய் நடிப்பில் ஆதி அஜித் நடிப்பில் பரமசிவன் ஆகிய படங்கள் ஒரே நாளில் பொங்கல் தினத்தில் வெளியானது. இதில் இந்த இரண்டு படங்களுமே ரீமேக் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

போக்கிரி – ஆழ்வார்

கடந்த 2007-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் விஜய் நடித்த போக்கிரி மற்றும் அஜித் நடித்த ஆழ்வார் படங்கள் ஒரே நாளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜில்லா – வீரம்

அடுத்து 7 வருட இடைவெளிக்கு பிறகு கடந்த 2014-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் விஜய் நடிப்பில் ஜில்லா அஜித் நடிப்பில் வீரம் ஆகிய படங்கள் ஒன்றாக வெளியானது.

இந்நிலையில், 8 வருடங்களுகளுக்கு பிறகு துணிவு – வாரிசு ஆகிய இரண்டு படங்களும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பீஸ்ட் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்து வரும் இந்த படத்தில் சரத்குமார் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்கள் நடித்து வருகின்றனர். விஜய் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு குடும்ப பின்னணி கதையம்சம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது.

வலிமை படத்திற்கு அஜித் இயக்குநர் எச்.வினோத் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் 3-வது முறையாக இணைந்துள்ள படம் துணிவு. இந்த படத்திற்காக அஜித்தின் வித்தியாசமாக கெட்டப் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது.

பொங்கல் மோதலாக துணிவு – வாரிசு?

இந்நிலையில் துணிவு மற்றும் வாரிசு படங்கள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதில் விஜயின் வாரிசு படம் ஜனவரி 12-ந் தேதி வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் துணிவு படம் 2023 வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதனால் இந்த இரண்டு படங்களும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்பது ஏறக்குறைய உறுதியாவிட்டது.  இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு படங்களும் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று கூறப்படுபவதால் ரசிகர்கள் இப்போதிருந்தே இணையத்தை அதிரவிட் தொடங்கியுள்ளனர்,

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema vijay varisu and ajith thunive clash on pongal 2023

Best of Express