விஜய் சார் மகிழ்ச்சி அதுபோதும் எனக்கு என வாரிசு படத்தின் இயக்குனர் வம்சி பைடிபள்ளி பேசியுள்ள வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Advertisment
பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய் நடித்துள்ள படம் வாரிசு. பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கியுள்ள இந்த படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் சரத்குமார், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகிபாபு, பிரகாஷ்ராஜ், கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமன் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், பொங்கல் பண்’டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11-ந் தேதி துணிவு படத்துடன் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், 3 நாட்களில் படம் 100 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வாரிசு படத்திற்கான வரவேற்புக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குனர் வமசி பைடிபள்ளி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் பேசிய அவர், இந்த படத்தின் வெற்றியை சுனில் பாபு சாருக்கு சமர்பிக்கிறேன். வாரிசு ஒரு படம் இல்லை. இது ஒரு நம்பிக்கை தளபதி விஜய் என் மீது வைத்த நம்பிக்கை, தயாரிப்பாளர் தில் ராஜூ என் மீது வைத்த நம்பிக்கை.
இந்த படத்தின் டீம் என்மேல் வைத்த நம்பிக்கை. தமிழ் மக்களுக்கும் விஜய் ரசிகர்கள் அனைவரும் சேர்ந்து என்னை ஜெயிக்க வைத்திருக்கிறீர்கள். இதனால் தமிழ் மக்கள் அனைவருக்கும் நான் இரு கரம்கூப்பி வணங்குகிறேன். ஒரு நம்பிக்கைதான் முக்கியமான எமோஷன். இந்த படத்தின் கதையை விஜய் சாருக்கு சொல்லும்போது டிடவலப் பண்ணுங்க என்று சொன்னார்.
அதன்பிறகு கதையை முழுவதும் அவரிடம் சொல்லும்போது இந்த படம் உங்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்கும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று சொன்னேன். இந்த படம் தொடங்கப்பட்டத்தில் இருந்து தெலுங்கு டைரக்டர் என்ற விமர்சனம் வந்துகொண்டே இருந்தது. அந்த வார்த்தை என்னை பாதித்தது. ஆனால் தமிழ் ஆளோ அல்லது தெலுங்கு ஆளோ இல்லை முதலில் நான் ஒரு மனிதன். அதேபோல் தமிழ் மக்கள் ரசிக்கும்படியான படத்தை கொடுத்திருக்கிறேன். தமிழ் மக்கள் நெஞ்சில் ஒரு சிறிய இடம் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். எனக்கு அது போதும்.
இது ஒரு பக்கா தமிழ் படம் என்று நான் முதலில் இருந்தே சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் தியேட்டருக்கு வரும்போது உங்களுக்கு என்னென்ன எங்க எங்க வேண்டுமோ அதேல்லாம் அங்க அங்க இருக்கும். இதை தாண்டி தளபதி விஜய் சார். அவரைப்பற்றி எவ்வளவு சொன்னாலும் முடியாது. அவர் ஒரு பெரிய ஸ்டார் என்பது எல்லாருக்கும் தெரியும். அவர் எப்படிபட்டவர் என்பதை அவரது அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.
இன்னைக்கு கூட அவரிடம் பேசும்போது சார் உங்களுக்கு சந்தோஷமா என்று கேட்டேன். அதற்கு அவர் மிகவும் சந்தோஷம் என்று சொன்னார். அதுவே எனக்கு போதும். என்னை நம்பிய அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் என்ன கேட்டேனோ அதை அப்படியே எனக்கு கொடுத்தவர் தில் ராஜூ சார். அவருக்கும் என் நன்றி. படத்தின் இசையமைப்பாளர் தமிழ் மக்களின் ரசனை அறிந்து பாடல்கள் பின்னணி இசையை கொடுத்துள்ளார். அவருக்கும் என் நன்றி என்று கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/