scorecardresearch

வாரிசு ரூ 275 கோடி; துணிவு 175 கோடி வசூல்: பிகில்- விஸ்வாசம் சாதனை தகர்கிறது

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ரீ-என்ட்ரி படமான பதான் தற்போது பாக்ஸ் ஆபிஸில் களமிறங்கியுள்ளது.

வாரிசு ரூ 275 கோடி; துணிவு 175 கோடி வசூல்: பிகில்- விஸ்வாசம் சாதனை தகர்கிறது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான விஜயின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு ஆகிய 2 படங்களும் தற்போது 3-வது வாரத்தை தொடங்கியுள்ள நிலையில், இரு படங்களில் வசூல் நிலவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக விஜய் அஜித் இருவரும் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ரசிகர்களை வைத்துள்ளனர். இவர்களின் படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் வாரிசு, அஜித் நடிப்பில் துணிவு ஆகிய படங்கள் வெளியானது.

இரண்டு படங்களும், கலவையான விமர்சனங்களை பெற்றாலும், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது. இதனிடையே வாரிசு மற்றும் துணிவு ஆகியவற்றின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில் வாரிசு படம், இதுவரை உலகளவில் டிக்கெட் விற்பனையில் ரூ.275 கோடி சம்பாதித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது ஏற்கனவே விஜய்யின் சினிமா கேரியரில் இரண்டாவது பெரிய வசூல் என்று கூறப்படுகிறது. 2019ம் ஆண்டு வெளியான விஜயின், பிகில் படம் அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியாக உள்ளது. இதற்கிடையில், அதே காலகட்டத்தில் துணிவு ரூ.175 கோடியை எட்டியுள்ளது. மேலும் படத்தின் வசூல் அஜித்தின் மிகப்பெரிய வெற்றிப்படமாக விஸ்வாசம் (2019) படத்தின் வசூலை நெருங்கியுள்ளது. வரும் நாட்களில் விஸ்வாசம் படத்தின் சாதனயை துணிவு தகர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதிடையே பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ரீ-என்ட்ரி படமான பதான் தற்போது பாக்ஸ் ஆபிஸில் களமிறங்கியுள்ள நிலையில், இந்த வார இறுதியில் துணிவு, வாரிசு படங்களின் வசூல் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பிற மொழி படங்களை வரவேற்பதில், தமிழ் ரசிகர்கள் முன்னிலையில் இருந்து வரும் நிலையில், தமிழ் அல்லாத ஒரு திரைப்படம் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை பெற்றால், அது மாநிலத்தில் பெரிய வெற்றிப்படமாக மாறும். குறிப்பாக கேரளா, கர்நாடகா மற்றும் தெலுங்கு மாநிலங்களில் வெகுஜன பார்வையாளர்களை பதான் படம் கவர்ந்துள்ள நிலையில், தமிழ் ரசிகர்களும் விரைவில் ஏற்றுக்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema vijay vs ajith pongal release varisu vs thunivu collection

Best of Express