Advertisment
Presenting Partner
Desktop GIF

புது வீடு... தள்ளிப்போன மகனின் திருமணம் : விஜயகாந்தின் நிறைவேறாத ஆசை

தேமுதிக அலுவலக வளாகத்தில் விஜயகாந்த் உடல் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

author-image
WebDesk
New Update
Vijayakanth Sons

மகன்களுடன் விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்தின் திடீர் மரணம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரின் நிறைவேறாத ஆசைகள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், மூத்த அரசியல் ஆளுமையாகவும் இருந்தவர் கேப்டன் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று முன்தினம் காலை மரணமடைந்தார். அவரது மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அரசியல் தலைவர்கள், முன்னணி நடிகர்கள் என பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து நேற்று மாலை 5 மணியளவில் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தேமுதிக அலுவலக வளாகத்தில் விஜயகாந்த் உடல் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் இறந்த துயரத்தில் இருந்து மீளாத பலரும் அவரின் குடும்ப உறுப்பினர்கள், அவரின் ஆசைகள் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆராய தொடங்கியுள்ளனர்.

இதில் குறிப்பாக 2 மகன்களை பெற்ற விஜயகாந்த் அதில் ஒருவருக்கு கூட திருமணம் செய்து பார்க்காமல் மறைந்துவிட்டார். விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரனுக்கு, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு (2019) கோவையை சேர்ந்த தொழிலதிபர் இளங்கோ என்பரின் மகள் கீர்த்தனாவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதன்பிறகு விஜயகாந்தின் உடல் நிலை மோசமடைந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் தனது மகன் திருமணத்தை நடத்த விரும்பியுள்ளார் விஜயகாந்த்.

இதற்காக மத்திய அமைச்சர் ஒருவரின் மூலம் பிரதமர் மோடியிடம் தேதி கேட்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு பக்கம் மோடியின் நேரம் கிடைக்காத நிலையில், மறுப்பகம் விஜயகாந்தின் உடல்நிலை மேலும் மோசமான நிலைக்கு சென்றது. ஆனால் தற்போது தனது மகனின் திருமணத்தை பார்க்காமலே விஜயகாந்த் மரணமடைந்துவிட்டார். அதே போல் புது வீடு கட்டி அதில் குடியேற வேண்டும் என்றும் விரும்பியுள்ளார். ஆனால் அதுவுமு் நிராசையாக மாறிப்போனது.

விஜயகாந்தின் 2-வது மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில், அவர் வெளிநாட்டு பெண்ணுடன் கிசுகிசுக்கப்பட்டு வருவதாகவும், அண்ணனின் திருமணத்தின் காரணமாக அவரது திருமணமும் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Vijayakanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment