Advertisment

விஜயகாந்த் vs ராமராஜன்: 13 முறை நேரடி போட்டி; 'வில்லேஜ் கிங்' யார்?

ரஜினி கமல் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த காலக்கட்டத்தில் இவர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அதிக வெற்றிகளை குவித்தவர்கள் விஜயகாந்த் மற்றும் ராமராஜன்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ramarajan Vijayakanth

ராமராஜன் - விஜயகாந்த்

80-90 களில் இருந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள ரஜினிகாந்த் – கமல்ஹாசன். தற்போதுவரை சினிமாவில் இவர்கள் இருவரும் ஹீரோவாக நடித்து வருகின்றனர். அதே சமயம் இவர்கள் பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த காலக்கட்டத்தில் இவர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அதிக வெற்றிகளை குவித்தவர்கள் விஜயகாந்த் மற்றும் ராமராஜன்.

Advertisment

நகரத்து ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் – கமல்ஹாசன் வெற்றிகளை குவித்தாலும் விஜயகாந்த் ராமராஜன் இருவரும் கிராமத்து ரசிகர்கள் மத்தியில் தங்களின் வெற்றிகளை குவித்தனர். இன்றளவும் பல கிராமங்களில் விஜயகாந்த் – ராமராஜன் இருவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. இவர்கள் இருவருமே கிராமத்து நாயகர்கள் என்றாலும் கூட இவர்களின் படங்கள் இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது.

தழுவாத கைகள் – தர்மதேவதை – நம்ம ஊரு நல்ல ஊரு (1986)

1986-ம் ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு விஜயகாந்த் நடிப்பில் தழுவாத கைககள், தர்மதேவதை ஆகிய இரண்டு படங்களும், ராமராஜன் நடிப்பில் நம்ம ஊரு நல்ல ஊரு திரைப்படமும் வெளியானது. இந்த மூன்று படங்களுமே வெற்றிப்படங்களாக அமைந்தது.

வீரபாண்டியன் - எங்க ஊரு பாட்டுக்காரன் (1987)

அதனைத் தொடர்ந்து 1987-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விஜயகாந்த் நடிப்பில் வீரபாண்டியன், ராமராஜன் நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படமும் வெளியானது. இதில் ராமராஜனின் எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த நிலையில், விஜயகாந்தின் வீரபாண்யன் வெற்றியை கொடுத்தது.

காலையும் நீயே மாலையும் நீயே – செண்பகமே செண்பகமே (1988)

அதன்பிறகு 1988-ம் ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு விஜயகாந்த் நடிப்பில் காலையும் நீயே மாலையும் நீயே என்ற படமும், ராமராஜன் நடிப்பில் செண்பகமே செண்பகமே ஆகிய திரைப்படங்கள் வெளியானது. இதில் இரண்டு படங்களுமே வெற்றிப்படமாக அமைந்தது.

பூந்தோட்ட காவல்காரன் – பார்த்தால் பசு (1988)

1988-ம் ஆண் ஜூன் மாதம் விஜயகாந்த் நடிப்பில் பூந்தோட்ட காவல்காரன் படமும், ராமராஜன் நடிப்பில் பார்த்தால் பசு படமும் வெளியானது. இதில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான பூந்தோட்ட காவல்காரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்து விஜயகாந்துக்கு பாராட்டுக்களை பெற்று தந்தது.

உழைத்து வாழ வேண்டும் – நம்ம ஊரு நாயகன் (1988)

அடுத்து 1988-ம் ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு விஜயகாந்த் நடிப்பில் உழைத்து வாழ வேண்டும் ராமராஜன் நடிப்பில் நம்ம ஊரு நாயகன் திரைப்படமும் வெளியானது. இதில் இரண்டு படங்களுமே சுமாரான வெற்றியை பெற்றது.

பொன்மனச்செல்வன் – ராஜா ராஜா தான் (1989)

1989-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ந்தேதி ராமராஜன் நடிப்பில் ராஜா ராஜா தான் என்ற படமும்,  ஆகஸ்ட் 15-ந் தேதி விஜயகாந்த் நடிப்பில் பொன்மனசெல்வன் திரைப்படமும் வெளியானது. இதில் பொன்மனச்செல்வன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்த நிலையில், ராஜா ராஜா தான் படம் சுமாரான வெற்றியை கொடுத்தது.

தர்மம் வெல்லும் – ராஜநடை – அன்புக்கட்டளை – தங்கமான ராசா (1989)

1989-ம் ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு விஜயகாந்த் நடிப்பில் ராஜநடை, தர்மம் வெல்லும் படமும், ராமராஜன் நடிப்பில் அன்புக்கட்டளை தங்கமான ராசா படமும் வெளியானது. இதில் அன்புக்கட்டளை திரைப்படம் மட்டும் சுமாரான வெற்றியை கொடுத்தாலும் மற்ற 3 படங்களும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தது.

மீனாட்சி திருவிளையாடல் - மனசுக்கேத்த மகராசா (1989)

1989-ம் ஆண்டு டிசம்பர் 1ந் தேதி விஜயகாந்த் நடிப்பில் மீனாட்சி திருவிளையாடல், ராமராஜன் நடிப்பில் மனசுக்கேத்த மகராசா திரைப்படமும் வெளியானது. இதில் இரண்டு படங்களுமே சுமாரான வெற்றியை கொடுத்த படங்கள்.

புதுப்பாடகன் – தங்கத்தின் தங்கம் (1990)

1990-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி விஜயகாந்த் நடிப்பில் புதுப்பாடகன், ராமராஜன் நடிப்பில் தங்கத்தின் தங்கம் ஆகிய படங்களும் வெளியானது. இதில் புதுப்பாடகன் வெற்றிப்படமாக அமைந்த நிலையில், தங்கத்தின் தங்கம் சுமாரான வரவேற்பை பெற்றது.

சத்ரியன் – புதுப்பாட்டு (1990)

1990-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு விஜயகாந்த் நடிப்பில் சத்ரியன், ராமராஜன் நடிப்பில் புதுப்பாட்டு ஆகிய படங்கள் வெளியானது. இதில் சத்ரியன் திரைப்படம் ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது.

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் - நெஞ்சமுண்டு நேர்மையுண்டு (1991)

1991-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு விஜயகாந்த் நடிப்பில் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற படமும், ராமராஜனின் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்ற படமும் வெளியானது. இதில் ராமராஜனின் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், விஜயகாந்தின் மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் படம் சுமாரான வெற்றியை கொடுத்தது.

தர்ம சக்கரம் – கோபுர தீபம் – (1997)

1997-ம் ஆண்டு பொங்கல் தினத்தில் விஜயகாந்த் நடிப்பில் தர்மசக்கரம், ராமராஜன் நடிப்பில் கோபுர தீபம் திரைப்படமும் வெளியானது. இதில் இரண்டு படங்களுமே எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

தவசி – பொன்னான நேரம் (2001)

2001-ம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் தவசி ராமராஜன் நடிப்பில் பொன்னான நேரம் என்ற படமும் வெளியானர். இதில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான தவசி திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமாக அமைந்தது. ஆனால் பொன்னான நேரம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment