Advertisment

5 நாள் திருமண கொண்டாட்டம்... சொந்த ஊரில் பிரம்மாண்ட வரவேற்பு : பேத்தி திருமணத்தில் அசத்திய விஜயகுமார்

விஜயகுமார் முத்துக்கண்ணு தம்பதியின் 2-வது மகளான அனிதாவின் மகள் தியாவுக்கும் அவரது காதலனுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
Vijayakumar Grand Daughter

விஜயகுமார் - அனிதா விஜயகுமார்

நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமண கொண்டாட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தற்போது தனது சொந்த ஊரில் கட்டியுள்ள பிரம்மாண்ட வீட்டில் தனது பேத்திக்காக நடிகர் விஜயகுமார் ரிஷப்ஷன் வைத்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் முக்கியமானவர் விஜயகுமார். வில்லன், குணச்சித்திரம்,’ ஹீரோ என பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து புகழ்பெற்ற இவர் தற்போது சினிமாவில் முக்கிய கேரக்டர்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். இதனிடையே கடந்த வாரம், விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமண கொண்டாட்டம் தொடங்கியது.

விஜயகுமார் முத்துக்கண்ணு தம்பதியின் 2-வது மகளான அனிதாவின் மகள் தியாவுக்கும் அவரது காதலனுக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்த பிரம்மாண்ட திருமணம் தொடர்பான புகைப்படங்கள் கடந்த ஒரு வாரமாக இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்த நிலையில், பலரும் புதுமண தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, திருமணம் முடிந்த கையோடு, தனது சொந்த கிராமத்தில் உள்ள பூர்வீக வீட்டில், தனது பேத்திக்காக பிரம்மாண்ட ரிஷப்ஷன் ஏற்பாடு செய்துள்ளார். இந்த நிகழ்வில் வாணவேடிக்கை உள்ளிட்ட பல கொண்டாட்டங்கள் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோ பதிவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து விஜயகுமாரின் மகள் அனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜயகுமார் ஏற்பாடு செய்த ரிஷப்ஷன் குறித்த வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த ரிஷப்ஷன் நிகழ்ச்சியில் நடைபெற்ற வாணவேடிக்கை தொடர்பான நிகழ்வு தொடர்பான வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது. அதேபோல் புதுமணப்பெண் தியாவும், தனது தாத்தாவின் அன்பின் பெருமையை வெளிப்படுத்தும் வயைில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். தனது பழைய வீட்டை புதுப்பித்து மாற்றியுள்ள விஜயகுமார், அங்கு தனது தாய் தந்தைக்கு சிலை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

vijayakumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment