scorecardresearch

‘பாக்ஸ் ஆபீஸ் கிங் தளபதி’: விஜயுடன் நடிகர் ஷாம் வீடியோ

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜனவரி 11-ந்’ தேதி வெளியாக வாரிசு திரைப்படம் வசூலை வாரி குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘பாக்ஸ் ஆபீஸ் கிங் தளபதி’: விஜயுடன் நடிகர் ஷாம் வீடியோ

விஜயின் வாரிசு படம் குறித்து வெளியாகும் தகவல்கள் அவ்வப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், நடிகர் ஷாம் வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பீஸ்ட் படத்திற்கு பிறகு விஜய் நடிப்பில் தயாரான படம் வாரிசு. பிரகாஷ்ராஷ், சரத்குமார், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டரில் நடித்த இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்தார். தமன் இசையமைத்த இந்த படத்தை வம்சி இயக்கிய நிலையில், தில் ராஜூ தயாரித்திருந்தார்.

பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஜனவரி 11-ந்’ தேதி வெளியாக வாரிசு திரைப்படம் வசூலை வாரி குவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே வாரிசு படத்தில் விஜய்யின் அண்ணனாக நடித்த நடிகர் ஷாம், வெற்றியைக் கொண்டாடடும் வகையில் வாரிசு படத்தின் செட்டில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வீடியோவில், விஜய் மற்றும் ஷாம் இருவரும் வாரிசு கோல்ஃப் வண்டியை ஓட்டுவது போல் தெரிகிறது. வீடியோவைப் பகிர்ந்துள்ள ஷாம், படம் 7 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூ 210 கோடியைத் தாண்டியதாக பதிவிட்டுள்ளார். படத்தின் முதல் வார வசூல் குறித்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை தயாரிப்பாளர்கள் ட்விட்டரில் அறிவித்துள்ளனர். அதில் வாரிசு படத்தின் 8 நாள் வசூல் தோராயமாக ரூ.220 கோடியாக இருக்கும். இருப்பினும் அடுத்த வாரத்தில் ரூ.250 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் வாரிசு படம் வெளியான அன்றைய தினம் வெளியான அஜித்தின் துணிவு வாரிசு படத்திற்கு கடும் போட்டியாக உள்ளது. துணிவு இதுவரை தமிழகத்தில் மட்டும் 84 கோடி வசூல் செய்துள்ளது. வாரிசு படத்தை விட சுமார் 30 கோடி வித்தியாசத்தில் துணிவு பின்தங்கியிருந்தாலும், வாரிசு படத்திற்கு கடுமையான போட்டியாக உள்ளது. இந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாத நிலையில், இந்த இரண்டு படங்களுமே மூன்றாவது வாரத்தில் மேலும் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தனை பரபரப்பும், பாக்ஸ் ஆபிஸ் போட்டியும் இருந்தபோதிலும், இரண்டு பெரிய படங்களின் மோதலால் தமிழகத்தில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். முன்னதாக, தமிழகத்தில் தியேட்டர் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில்,

 இது வெறும் நஷ்டம். இது போன்ற பெரிய படங்கள் தனித்தனியாக வெளிவர வேண்டும் அப்போதுதான் அவர்களின் திறனை உணர முடியும். இப்போது, இருவரும் ஒருவரையொருவர் போட்டி போட்டுக்கொண்டு நஷ்ட நிலைக்கு மட்டுமே வழிவகுக்கும். இதேபோன்ற கருத்தை சமீபத்தில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ட்விட்டர் பதிவில் வெளியிட்டிருந்தார்.

2 நட்சத்திரங்கள் ஒவ்வொருவருக்கும் 10 கோடி மார்க்கெட் உள்ளது மற்றும் அவர்கள் ஒன்றாக நடித்தால் அது ஹிட் ஆன ஒரு படத்தில் 12-14 கோடி சம்பாதிக்கலாம். ஆனால் துரதிருஷ்டவசமாக, இது 20 கோடி வரும் என்று பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். அதனால்தான் மல்டி ஸ்டார் படங்கள் அடிக்கடி வருவதில்லை ஒட்டுமொத்த ரிசல்ட் வரும்போது அனைத்தும் தெரிந்துவிடும் என்று கூறி வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema vijays bts video from varisu emerges as film crosses rs 220 crore mark