Advertisment

நீண்ட கால காத்திருப்புக்கு முடிவு : துருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது?

கெளதம் மேனன் இயக்கத்தில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஸ்பை த்ரில்லர் படமான துருவ நட்சத்திரம் மே 19ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Dhuruv Natchathiram

துருவ நட்சத்திரம்

கவுதம் மேனன் – விக்ரம் கூட்டணியில் தயாரான துருவ நட்சத்திரம் படம் வரும் மே 19-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது விக்ரம் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குனர் என்ற பெயர் பெற்றவர் கவுதம் மேனன். மின்னலே படம் தொடங்கி காக்க காக்க, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இவரது படங்களில் நாயகர்களை ஸ்டைலிஷாக காட்டியிருப்பார்.

அந்த வகையில் விக்ரம் – கவுதம் மேனன் கூட்டணியில் தயாரான படம் துருவ நட்சத்திரம். 2013-ம் ஆண்டு இந்த படத்தில் சூர்யா நாயகனாக நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டில், மேனன் முன்னணி நடிகர்களான சூர்யா மற்றும் த்ரிஷாவுடன் போஸ்டர்கள் மற்றும் டீஸர்களை வெளியிடப்பட்டது. ஏ.ஆர்.ரஹ்மான், சிம்ரன் மற்றும் பார்த்தீபன் படத்தில் இணைந்தனர்.

ஆனால், கவுதம் மேனன், சூர்யாவுடனான கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து சூர்யா விலகினார். ஆறு மாதங்களுக்குப் பிறகும் கவுதம் மேனன் ஸ்கிரிப்டைக் தயார் செய்யவில்லை என்பதால் இந்த படத்திற்காக இனிமேலும் காத்திருக்க முடியாது என்று கூறி படத்தில் இருந்து விலகுவதாக சூர்யா அறிவித்திருந்தார்.

பின்னர் 2015ல், கவுதம் மேனன் மீண்டும் இந்த படத்தை கையில் எடுத்தார். அப்போது ஸ்கிரிப்டை தயாராக வைத்திருந்த கவுதம் மேனன், விக்ரம் மற்றும் நயன்தாரா கமிட் செய்திருந்தார். ஆனால் தயாரிப்பாளர் கிடைக்காததால் படம் முடங்கியது. அதனைத் தொடர்ந்து மீண்டும், அதே ஆண்டு நவம்பரில், ஜெயம் ரவியுடன் இணைந்து இந்த படத்தை எடுக்க முயற்சித்தார். ஆனால் அதுவும் பலனளிக்கவில்லை.

பா.ரஞ்சித் இயக்கத்தில் கபாலி படத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பரிசீலித்த படங்களில் இந்தப் படமும் ஒன்று என்றும் பேசப்பட்டது. இறுதியாக நவம்பர் 2016 இல், கவுதம் மேனன் நிதியைப் பெற முடிந்தது, அதனைத் தொடர்ந்து மீண்டும் விக்ரமை கமிட் செய்து, ஸ்லோவேனியா, பல்கேரியா மற்றும் ஜார்ஜியாவில் படப்பிடிப்பைத் தொடங்கினார்.

ஆனால், நிதிப் பற்றாக்குறையால் பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், இயக்குனருக்குப் பிரச்சனைகள் தீரவில்லை. சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு தற்போது துருவ நட்சத்திரம் இறுதியாக வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது. ஆனால் கவுதம் மேனன் சூர்யாவைக் வைத்து வெளியிட்ட டீசரில் காட்சிப்படுத்திய அதே படம் இல்லை.

நீண்ட தாமதம், ஸ்கிரிப்ட் மற்றும் நட்சத்திரங்களின் 360 டிகிரி டர்ன் ட்விட்டர்வெர்ஸ் வேடிக்கை பார்க்க சரியான எதிர்பார்ப்பாக தற்போது துருவ நட்சத்திரம் மாறியுள்ளது. இது குறித்து சினிமா வித் ஏபி (@CinemaWithAB) ட்விட்டர் பதிவில், 100 சதவீத ஈமோஜியுடன் செய்தியை அறிவித்தபோது, ரசிகர் ஒருவர்“நான் 8 ஆம் வகுப்பு படிக்கும் போது இந்தப் படத்தின் டீசரைப் பார்த்தேன். இப்போது நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

மற்றொருவர்"துருவ நட்சத்திரம்' டீசர் வெளியானபோது லோகேஷ் யாருக்கும் தெரியாது, கமல் தனது கட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கவில்லை, ஜேம்ஸ் கேமரூன் அவதார் தொடர்ச்சிகளை எழுதிக் கொண்டிருந்தார், கூகுள் பிக்சல் இப்போதுதான் அறிவிக்கப்பட்டது, ஹாரி & மேகன் மார்க்லே டேட்டிங் செய்யத் தொடங்கினார். & ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றார்,” என்று பல சம்பவங்களை தொகுத்துள்ளார்.

ஆனால் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் நடிகர் பெனடிக்ட் காரெட்டின் தனது ட்விட்டர் பதிவில், எனக்கும் முழு படத்திற்கும் அதில் ஒரு பகுதியாக இருந்ததற்கு பெருமைப்படுகிறேன். இது கடைசியாக எடுக்கப்பட்ட காட்சி. நீண்ட 6 வருட படப்பிடிப்பிற்கு பிறகு துருவநட்சத்திரம் இந்த மே மாதம் வெளியாகிறது. இப்போதைக்கு மே அதுதான். மேலும் மாற்றங்கள் மற்றும் தேதிகள் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment