Tamil Cinema Vikram Box Office Collection : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று வெளியான படம் விக்ரம். 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருந்த நிலையில் நிலையில். பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான விக்ரம் படத்தின் முதல்நாள கலெக்ஷன் என்ன என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
கமல் நடிப்பில் கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு விஸ்வரூபம 2 படம் வெளியானது. அதன்பிறகு ஒரு சில படங்களை தயாரித்த கமல், 4 ஆண்டுகளுக்கு பிறகு விக்ரம் படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
அனிருத்த இசையமைத்திருந்த இந்த படத்தில் கமல்ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்க ரெட்ஜெயிண்ட் மூவிஸ் மூலம் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். கலைஞர் பிறந்த நாளாக ஜூன் 3-ந தேதி (நேற்று) வெளியான இந்த படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. கமல் தனது ரீ-எண்ட்ரியை சரியாக கொடுத்துள்ளார் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விக்ரம் முதல் நாள் வசூல் இந்திய பாக்ஸ் ஆபிஸில் சுமார் 33 கோடிகள் என தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் தமிழகத்தில், முதல்நாளில் சுமார் 21 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது முன்னணி நடிகரான கமல்ஹாசனின் திரை, வாழ்க்கையில் விக்ரம் படம் சிறந்த ஓப்பனிங்கை பதிவு செய்துள்ளது. பொதுவாக, தென்னிந்தியாவில் ஒரு படம் முதல் நாளில் பெரிய ஓபனிங் கண்டால் இரண்டாவது நாளில் பெரிய வீழ்ச்சிக்கு எப்போதும் வாய்ப்பு உள்ளது,
ஆனால் விக்ரம் படத்திற்கு டிக்கெட் ரிசவர் செய்துவிட்டதாலும், படத்திற்கு திரைத்துரையினரும், ரசிகர்களும் பாசிட்டீவான விமர்சனங்களை கொடுத்துள்ளதாலும், படத்தின் பாக்ஸ் ஆபீஸ் பெரிய அளவில் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மூன்றே நாட்களில் விக்ரம் படம் ரூ. 90 கோடி வசூலை ஈட்டும் என்று கூறி வருகின்றனர்.
தற்போது விக்ரம் படம் தமிழகத்தில் முதல் நாளில் 20 கோடி வசூல் செய்துள்ளர். இதன் மூலம் முதல் நாளில் 20 கோடி வசூலித்த 8-வது படம் என்றும், விடுமுறை இல்லாத நாட்களில் இவ்வளவு வசூல் செய்த 4-வது படமாகவும் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் விஜய், அஜித், ரஜினிகாந்த் நடித்த படங்கள் மட்டுமே தமிழகத்தில் ஒரு நாளில் 20 கோடி வசூலை கொடுத்துள்ளனர்.
அதன்பிறகு கோலிவுட்டில் இருந்து அடுத்த சிறந்த ஓப்பனிங் பெரும் இடைவெளி ஏற்பட்டது. ஆனால் தற்போது இந்த இடைவெளியை வக்ரம் படம் பூர்த்தி செய்துள்ளது. தமிழகம் மட்டுமல்லாது, அண்டை மாநிலமான கேரளாவில் கோலிவுட்டின் மூன்றாவது சிறந்த படமாக தொடக்க நாளில் இப்படம் ரூ. சுமார் 5 கோடி ரூபாய் வசூலத்து்ளளது. கர்நாடகாவும் ரூ. 3.25 கோடியும், ஆந்திரா தெலுங்கானாவில், ரூ. 3 கோடியும் வசூலித்துள்ளது.
இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாட்டிலும் விக்ரம் படம் வெளியாகி நல்ல வசூலை அள்ளியுள்ளது. இதன் மூலம் உலகளவில் 50 கோடிகள் கடந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகறது. இந்தியாவில் விக்ரமின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கான பிராந்திய விவரம்
தமிழ்நாடு - ரூ. 21 கோடி
AP/TS - ரூ. 2.90 கோடி
கர்நாடகா - ரூ. 3.40 கோடி
கேரளா - ரூ. 5 கோடி
இந்தியாவின் மற்ற பகுதிகள் - ரூ. 0.70 கோடி
மொத்தம் - ரூ. 33 கோடி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.