scorecardresearch
Live

Vikram Movie Live Review : ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் திருப்திகரமான ஆல்-அவுட் ஆக்ஷன் படம் – ரசிகரின் ட்விட்

Vikram Movie Review: Critics Rating: 3.0 stars, click to give your rating/review : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல் நடிப்பில் 4 வருடங்களுக்கு பிறகு இன்று வெளியாகியுள்ள விக்ரம் படம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vikram Movie Live Review : ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் திருப்திகரமான ஆல்-அவுட் ஆக்ஷன் படம் – ரசிகரின் ட்விட்
Vikram Movie Review Live News

Kamal Hassan, Vijay Sethupathi starrer Vikram Movie Review, Movie Launch Today LIVE Updates: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல் நடிப்பில் 4 வருடங்களுக்கு பிறகு இன்று வெளியாகியுள்ள விக்ரம் படம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல புதிய தொழில்நுட்பத்தை புகுத்திய பெருமை பெற்றுள்ள கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக கடந்த 2018-ம் ஆண்டு விஸ்வரூபம் படம் வெளியானது. அதன்பிறகு அரசியல் கட்சி தொடங்கிய கமல் சட்டமன்றம் மற்றும் நடாளுமன்ற தேர்தலை சந்தித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் பயணித்து வரும் கமல்ஹாசன், சுமார் 4 வருட இடைவெளிக்கு பிறகு விக்ரம் படத்தில் நடத்துள்ளார். கைதி மாஸ்டர் என்ற மெகாஹிட் படத்தை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

கமல்ஹாசனுடன் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத்பாசில், நரேன், ஷிவானி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயின்ட் மூவிஸ் வெளியிடுகிறது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளான இன்று (ஜூன் 03) விக்ரம் படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. வழக்கமான கமல் படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வரும் நிலையில், விக்ரம் படத்தை பார்க்க பெண்கள் அதிக விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல், முதல்நாள் முதல் ஷோ என்று விக்ரம் படத்தை பார்க்க பல திரையரங்குகளில் பெண்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. 4 வருடங்கள் இடைவெளி விட்டாலும் தற்போது வெளியாகியுள்ள விக்ரம் படம் இந்த 4 வருட இடைவெளியை பூர்த்தி செய்துவிடும் என்று கூறப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
15:32 (IST) 3 Jun 2022
ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் திருப்திகரமான ஆல்-அவுட் ஆக்ஷன் படம் – ரசிகரின் ட்விட்

ஸ்ரீதேவி ஸ்ரீதர் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சிறந்த தியேட்டர் அனுபவம். விக்ரம் படம் உங்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்கும் திருப்திகரமான ஆல்-அவுட் ஆக்ஷன் படம். அனைத்து முன்னணி நடிகர்களும் சூப்பர். அனிருத் சிறப்பாக இசையமைத்துள்ளார். படத்தின் ஹீரோக்கள் அனைவரும் சமரசம் இல்லாமல் நடித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

14:46 (IST) 3 Jun 2022
படத்தைப் பற்றி பல நல்ல விஷயங்களைக் கேட்கிறேன்! – நடிகர் கார்த்தி

விக்ரம் படம் குறித்து நடிகர் கார்த்தி தனது ட்விட்டரில், “விக்ரம் தனது ஆக்‌ஷன் அவதாரத்தில் கமல் சாரைப் பார்க்க இனியும் காத்திருகக முடியாது. படத்தைப் பற்றி பல நல்ல விஷயங்களைக் கேட்கிறேன்! நல்வாழ்த்துக்கள் இயக்குநர் மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

13:58 (IST) 3 Jun 2022
கமல்ஹாசனை மீண்டும் ஆக்ஷன் மோடில் பார்ப்பதில் மகிழ்ச்சி – ரசிகரின் ட்விட்

விக்ரம் படம் நன்றாக உள்ளது. யுனிவர்செல் ஹீரோ கமல்ஹாசனை மீண்டும் ஆக்ஷன் மோடில் பார்ப்பதில் மகிழ்ச்சி. விஜய் சேதுபதி பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் பாராட்டை பெற்றுள்ளனர். இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் இருவரும் தங்களது வழக்கமான சூப்பர் ஹிட்டை கொடுத்துள்ளனர். சூர்யாவின் தோற்றம் பிரம்மிக்க வைக்கிறது.என்று ரசிகர் ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

13:25 (IST) 3 Jun 2022
தனது அதிரடி களியாட்டம் மொத்தத்தையும் காட்டியுள்ளார் கமல் – ரசிகர் டவிட்

ஸ்ரீதர் பிள்ளை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார், “விக்ரம் மைண்ட் ப்ளோயிங்! புத்திசாலித்தனமானவர். மேலும் தனது அதிரடி களியாட்டம் மொத்தத்தையும் காட்டியுள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் எழுத்தில் நன்றாக எழுதப்பட்ட மற்றொரு தீரைப்படம் விக்ரம். இது ஏராளமான ஊக்கத்தை கொடுக்கும் தருணங்களை வழங்குகிறது. ஒரு ஆசாதரணமாக அற்புதமான படம் என்று கூறியுள்ளார்.

12:44 (IST) 3 Jun 2022
இன்றைய நாள் தமிழகத்தில் உலகநாயகனின் மிகப்பெரிய நாள் – ரசிகர் ட்விட்

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள விக்ரம் படம் இன்று வெளியாகியுள்ளது. பலத்த எதிர்பார்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படம் நல்ல விமர்சனங்களை பெற்று வரும நிலையில், ரமேஷ் பாலா என்பவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், , இன்றைய நாள் தமிழகத்தில் உலகநாயகனின் மிகப்பெரிய நாள். விக்ரம் படம் பெரிய ஓப்பனிங்கிற்கு சென்றுள்ளது என்று கூறியுள்ளார்.

12:38 (IST) 3 Jun 2022
முதல் நாள் முதல் ஷோ – நடிகர் நரேன் ட்விட்

விக்ரம் படத்தில் நடித்துள்ள நடிகர் நரேன் முதல் நாள் முதல் காட்சியை படத்தின் இயக்குநர் லோகெஷ் கனகராஜூடன் இணைந்து பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

12:05 (IST) 3 Jun 2022
விக்ரம் படம் சூப்பர் – உதயநிதி டவிட்

விக்ரம் படம் சூப்பர் கமல் சார் உட்பட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி என்று நடிகரும் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

12:01 (IST) 3 Jun 2022
கமல்ஹாசன் ஒரு மான்ஸ்டர் , விஜய் சேதுபதி ஒரு ஃபையர் – நடிகர் சாந்தனு

அசுரன் உயிருடன் இருக்கிறார். கமல்ஹாசன் ஒரு மான்ஸ்டர் விஜய் சேதுபதி ஒரு ஃபையர் சூர்யா பயங்கரம் என்று நடிகர் சாந்தனு தனது டவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

11:29 (IST) 3 Jun 2022
விக்ரம் படம் குறித்து அனிருத் டவிட்

2022 தொடங்கியபோது, ​​இதை எப்படி இழுக்க முடியும் என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன். ஏப்ரல் 13 முதல் ஜூன் 3 வரை 4 படங்கள் ரிலீஸாகியிருக்கிறது. பீஸ்ட், கேஆர்கே முதல் டான் வரை இப்போது விக்ரம். இந்தப் படங்களுக்கெல்லாம் உங்கள் அன்புதான் எங்களை இசையமைக்க வைத்தது. வைத்தது. எங்கள் மேவரிக் இசைக்குழு மற்றும் இசைக்கலைஞர்கள் இல்லாமல் சாத்தியமில்லை. அனைவரையும் விக்ரமை நாங்கள் எவ்வளவு ரசித்தோமோ, அதே அளவுக்கு நாளை (இன்று) முதல் விக்ரமை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் எப்பொழுதும் சொல்வது போல், மைல்ஸ் டூ கோ மச் லவ், என்று அனிருத் குறிப்பிட்டுள்ளார்.

10:58 (IST) 3 Jun 2022
விக்ரம் படத்தை பாாக்க வெயிட் பண்ண முடியாது – சாய் தரன் தேஜ்

பிரபல தெலுங்கு நடிகரான சாய் தரன் தேஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், விக்ரம் படம் பார்க்க என்னால் வெயிட் பண்ண முடியாது. இந்த பவர் ஹவுஸில் கமல் விஜய்சேதுபதி, பகத் பாசில்,ஆகியோர்களின அசுத்தனமாக நடிப்பை ஒன்றாகப் பார்ப்பது எந்த நடிகருக்கும் ஒரு வருந்துதான். அதனால் என்னால் இந்த படத்தை பார்க்க வெயிட் பண்ண முடியாது என்று கூறியுள்ளார்.

10:40 (IST) 3 Jun 2022
வணிகரீதியாக கமல் தான் ஒரு அசுரன் – ரசிகர் கருத்து

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் படத்தில் இவ்வளவு சிறந்த ரைட்டிங்கை பார்த்ததில்லை, அதன் நேரம் வணிகரீதியாக கமல் தான் இன்னும் ஒரு அசுரன் என்பதை நிரூபித்துள்ளார். அனைவரும் பார்க்க வேண்டிய படம் என ஒரு ரசிகர் கூறியுள்ளார்.

10:13 (IST) 3 Jun 2022
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் – இயக்குநர் ஜெயம் ராஜா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல் நடிப்பில் 4 வருடங்களுக்கு பிறகு இன்று வெளியாகியுள்ள விக்ரம் படம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இயக்குநர் மோகன் ராஜா, உங்களை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் இயக்குநர்களுக்கான மரியாதையை நிலைநிறுத்துவது என்ற போக்கை அமைத்ததற்கு நன்றி என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.

10:11 (IST) 3 Jun 2022
விக்ரம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல் நடிப்பில் 4 வருடங்களுக்கு பிறகு இன்று வெளியாகியுள்ள விக்ரம் படம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் சிவார்த்திகேயன், 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் தனது கிரீடத்தை பெற்றுள்ளார். வாழ்துக்கள். படம் வெற்றிபெற ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

09:56 (IST) 3 Jun 2022
இது லோகேஷ் கனகராஜ் சம்பவம், கமல் வெறித்தனம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல் நடிப்பில் 4 வருடங்களுக்கு பிறகு இன்று வெளியாகியுள்ள விக்ரம் படம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் ரசிகர்கள் ஒருவர் தனது பதிவில், விக்ரம் படம் முழுவதும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சம்பவம் செய்துள்ளார். கமல்ஹாசன் இன்ட்ரவல், மற்றும் க்ளைமேக்ஸ் கட்சிகளில் வெறித்தனம் காட்டியுள்ளார். சூர்யாவில் கேரக்டர் ஒரு யூகிக்க முடியாத ஒரு கேக்டர் என்று பதிவிட்டுள்ளார்.

Web Title: Tamil cinema vikram movie live review lokesh kanakaraj vikram movie live movie review live update vikram movie news