போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி, ஓரளவு வரவேற்பை பெற்ற, சார் திரைப்படம், ஒடிடி வெளியீட்டுக்கு தயாராகி வரும் நிலையில், படம் எப்போது வெளியாகும் என்பது குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.
கன்னிமாடம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் போஸ் வெங்கட். பல படங்களில் வில்லன் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டரில் நடித்துள்ள இவர், 2-வதாக சார் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு முதலில் மா.பொ.சி என்று பெயரிடப்பட்ட நிலையில், அதன்பிறகு சார் என்று மாற்றப்பட்டது. படத்தின் கதைக்களம், ஒரு அதிரடித் திரைப்படம் என்ற முரட்டுத்தனமான வெளிப்புறத் தோற்றம் இருந்தாலும், சிந்தனையும் உணர்ச்சியையும் தூண்டும் படமாக இருக்கிறது.
ஏழைகளுக்கு கல்வியை அனுமதிப்பதற்கான நியாயமான போராட்டத்தையும், சமூகத்திலிருந்து எந்தவொரு ஒடுக்குமுறையையும் ஒழிப்பதற்கான பாடுபடுவதையும் மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம, மங்கோல்லை என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த மக்களின் பின்னணியுடன் கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கிராமதர்தில், ஏழைகளுக்கான பள்ளிப்படிப்பு முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது, அதற்கு எதிராக கிளர்ச்சி செய்வது ஆளும் உயர் வர்க்கத்திற்கு எதிரான கடுமையான போராட்டத்தை பின்னணியாக கொண்டது.
விமல், சாயா தேவி, சரவணன், ரமா, வி.ஐ.எஸ். ஜெயபாலன், சரவண சக்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.எஸ்பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம், 2024-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. படத்தின் பின்னணி மற்றும் கருப்பொருள்கள் பாராட்டப்பட்டாலும், அதன் எளிமையான மற்றும் நேரடியான காட்சியமைப்புகள் ரசிகர்கள் மத்தியில் மந்தமான வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
தமிழ் அதிரடித் திரைப்படமான சர் இப்போது ரசிகர்களால் ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட உள்ள நிலையில், பிரபல ஒடிடி தளமான டென்ட்கோட்டாவில் இப்படம் வெளியாகியுள்ளது. இதை அறிவித்து, ஸ்ட்ரீமிங் ஜாம்பவான் தங்கள் எக்ஸ் தளத்தில்,“சார் ஒரு தீவிரமான, பிரச்சினை சார்ந்த படம், இது உங்களை சிந்திக்க வைக்கும். இப்போது டென்ட்கோட்டாவில் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் செய்கிறது” என்று பதிவிட்டுள்ளனர். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.