என் மனைவியை உயிருக்கு உயிராய் நேசிக்கிறேன் - விவாகரத்து பற்றி மனம் திறந்த விஷ்ணு!

Vishnu Vishal open Talk: அவர் மிகவும் நல்லவர், நான் எப்படிப்பட்டவன் என்பது என் மனைவிக்குத் தெரியும். 

Vishnu Vishal open Talk: ’ஒரு முறை பார்க்கலாம்’ என்ற குறைந்தபட்ச கியாரண்டி, நடிகர் விஷ்ணு விஷாலின் படங்களுக்கு எப்போதும் கிடைக்கும்.

காமெடி, த்ரில்லர், ஆக்‌ஷன் எதுவானாலும் தனக்கு பொருந்திப் போகும் கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர் இவர்.

தற்போது விஷ்ணு, இயக்குநர் எழிலின் இயக்கத்தில் ‘ஜெகஜால கில்லாடி’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இவர் தனது கல்லூரி தோழியான ரஜினி நட்ராஜை காதலித்து கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 2017-ல் ஆர்யன் என்ற மகன் பிறந்தான். இந்நிலையில் கடந்தாண்டு, அதாவது 2018, நவம்பரில் தானும், ரஜினியும் தனிப்பட்ட காரணங்களுக்காக விவாகரத்து செய்துக் கொண்ட விஷயத்தை ட்விட்டரில் அறிவித்தார் விஷ்ணு.

இந்நிலையில் முதன் முறையாக விவாகரத்திற்கான காரணம் குறித்து வாய் திறந்திருக்கிறார் விஷ்ணு.

“வாழ்வில் எதுவுமே நிரந்தரமில்லை என்பதை நான் இப்போது வரை உணர்ந்துக் கொண்டிருக்கிறேன். எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். என வாழ்வில் சிறப்பாக இருந்த விஷயம் திருமணம் என்று நினைத்தேன். ஆனால் அதுவும் இப்போது இல்லை.

என்ன நடந்தது என்பதை இதுவரை என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை. விவாகரத்தினால் ஏற்பட்ட எதிர்மறை எண்ணங்கள் பல காலம் என்னுள் இருக்கும்.

துவக்கத்தில் நான் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவனாக இருந்தேன். அதனால் சினிமாவில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து அனைவரிடமும் சகஜமாக பழக ஆரம்பித்தேன்.

காதல் காட்சிகள் இயல்பாக இருக்க வேண்டுமென நடிகைகளிடமும் ஃப்ரெண்ட்லியாகப் பழகினேன். அங்கு தான் பிரச்னை ஆரம்பமானது. நீ முன்பு போல் இல்லை, மாறி விட்டாய் என்ற பேச்சுகள் வரத் தொடங்கின.

நான் மாறியதை என் மனைவியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நான் காதலித்த நபர் நீ இல்லை எனும் அளவுக்கு, அவர் பாதித்திருக்கிறார்.

இப்போதும் என் மனைவியையும் மகனையும் உயிருக்கு உயிராய் நேசிக்கிறேன். அவரும் ஒருநாள் என்னை புரிந்துக் கொள்வார் என எனக்குத் தெரியும். அவர் மிகவும் நல்லவர், நான் எப்படிப்பட்டவன் என்பது என் மனைவிக்குத் தெரியும்.

சில நேரங்களில் நாம் ஒன்றாக இருப்பது இந்த பிரபஞ்சத்துக்கே பிடிக்காமல் போய்விடுகிறது” என்று தனது மணமுறிவைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார் விஷ்ணு.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close