நடிகர்கள் சத்யராஜ், வசந்த் ரவி ஆகியோர் நடிப்பில் குகன் சென்னியப்பன் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள ‘வெப்பன்’ திரைப்படத்தின் விமர்சனம்
கதைக்களம் :
அதீத சக்திகளை கொண்ட சூப்பர் ஹியூமன்கள் இந்த உலகில் இருக்கிறார்கள் என அழுத்தமாக நம்பும் நாயகன் வசந்த் ரவி பிரபல யூடியூபராகவும், சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் வலம் வருகிறார். இதற்கு எதிர்மாறாக பளாக் சொசைட்டி என்ற பெயரில் ரகசியக் குழு ஒன்றையும், பயோடெக் நிறுவனத்தின் மூலம் மனிதர்களை பலிகடாவாக்கும் ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டுவருகிறார் வில்லன் ராஜீவ் மேனன்.
இந்நிலையில் அதிசய நிகழ்வு ஒன்று தேனியில் நடைபெற, அதை தன் சேனலுக்கு கண்டெண்ட்டாக மாற்ற அங்கு பயணிக்கிறார் வசந்த் ரவி. மறுபுறம் தங்கள் ப்ளாக் சொசைட்டி நபர்களுக்கு ஆபத்தாக ஒரு சூப்பர் ஹியூமன் இருக்கிறார் என்பதைக் கண்டறிந்து வில்லனின் ஆட்களும் அங்கு பயணிக்க, அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் மீதி கதை
நடிகர்களின் நடிப்பு
முதல் பாதி முழுவதும் ஹீரோவா? துணை நடிகரா? என்று கேட்கும் அளவிற்கு வரும் வசந்த் ரவியின் நடிப்பு இரண்டாம் பாதியில் சூப்பராகவே ஒர்கவுட் ஆகி உள்ளது. சூப்பர் ஹியூமன் என்று பெரிதும் பில்டப் செய்யப்பட்டு இடைவேளைக்கு முன்பு அறிமுகமாகும் சத்யராஜின் இன்ட்ரோ மாஸாகவும் அவருடைய அழுத்தமான நடிப்பு கிளாஸாகவும் அமைந்துள்ளது. நாயகி தான்யா ஹோப், வில்லன் ராஜீவ் மேனன் மற்றும் துணை நடிகர்கள் ஆகியோரும் படத்திற்கு தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர்.
இயக்கம் மற்றும் இசை :
ஹாலிவுட்டில் சூப்பர் ஹியூமன் படங்களை நாம் பார்த்து ரசித்திருப்போம், தமிழில் அதுபோல ஒரு கதையை எழுதி அதை படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர் குகன் சென்னியப்பன். ஹாலிவுட் படங்களை போல கதை சொல்லும் புது முயற்சியில் சற்று சொதப்பியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். ஜிப்ரானின் பின்னணி இசை அமர்க்களமாக அமைத்துள்ளது.
படத்தில் ப்ளஸ் :
சற்று சுவாரசியமான முதல் பாதி
பின்னணி இசை
வசந்த் ரவி மற்றும் சத்யராஜின் நடிப்பு
புதுமையான கதைக்களம்
படத்தின் மைனஸ்
சொதப்பலான இரண்டாம் பாதி
லாஜிக் இல்லாத காட்சிகள்
அழுத்தமில்லாத கதாபாத்திரங்கள்
மொத்தத்தில் இயக்குனரின் கதை புதுமையாக இருந்தாலும் சுவாரஸ்யமில்லாத திரைக்கதை, லாஜிக் இல்லாத காட்சிகள் என பல தடைகள் இருப்பதால் படத்தை முழுமையாக ரசிக்க முடியவில்லை
நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“