Advertisment

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 : ரசிகர்கள் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

பொன்னியின் செல்வன் முதல் பாகம் அருள்மொழி வர்மனும், வல்லவராயன் வந்தியத்தேவனும் பாண்டியர்களுடன் போரிட்டு கடலில் மூழ்கியதுடன் முடிந்தது.

author-image
WebDesk
New Update
Ponniyin Selvan

பொன்னியின் செல்வன் 2 படத்தில் ஐஸ்வரி ராய்.

5 பாகங்கள் கொண்ட கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் 2-ம் பாகம் நாளை (ஏப்ரல் 28) வெளியாக உள்ள நிலையில், இந்த பாகத்தில் என்ன விஷயங்களை எதிர்பார்க்கலாம் என்பதையும், முதல் பாகத்தை காட்டிலும் 2-ம் பாகத்தில் பெரிய வித்தியாசம் இருக்கும் என்பதால் முதல் பாகத்தில் என்னென்ன விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisment

முதல் பாகத்தின் மறுபரிசீலனை:

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தில், பொன்னியின் செல்வன் அல்லது அருள்மொழி வர்மன் (ஜெயம் ரவி) மற்றும் வல்லவராயன் வந்தியத்தேவன் (கார்த்தி) இருவரும் நடுக்கடலில் கப்பலில் பாண்டியர்களுக்கு எதிராக நடந்த மோதலுக்குப் பிறகு, சோழ இளவரசனையும் வாணர் குல வீரரையும் அழைத்துச் சென்ற கப்பல் மூழ்கியது.

இதன் மூலம் டைட்டில் கேரக்டரான பொன்னியின் செல்வன் இறந்துவிட்டதாக நடிப்பது முட்டாள்தனமாக இருக்கும் என்பதை மணிரத்னம் அறிந்திருக்கிறார். அதனால், ட்ரெய்லர் மற்றும் டீஸர்கள் மூலம், அருள்மொழியும் வந்தியத்தேவனும் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்று அவர் மிகவும் வெளிப்படையாகவே தெளிவுபடுத்திவிட்டார். இருப்பினும், இருவரையும் காப்பாற்றுவதற்காக கடலில் குதித்த மூதாட்டியை சுற்றிய மர்மம் நீடித்து வருகிறது. ஊமை ராணியும் பெரிய பழுவேட்டரையர் மனைவியுமான நந்தினியும் (ஐஸ்வர்யா ராய்) ஒரு உருவ ஒற்றுமையுடன் இருப்பது போன்று காட்சி உள்ளது. இந்த மர்மம் 2-ம் பாகத்தில் விலகும்.  

ஆனால், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் என்ன நடந்து என்பதை முழுவதுமாக மறந்த ஒருவராக நீங்கள் இருந்தால் இதில் தெரிந்துகொள்ளுங்கள். 10ஆம் நூற்றாண்டை பின்னணியாக வைத்து, கமல்ஹாசனின் வசனத்துடன் பொன்னியின் செல்வன் 1 தொடங்குகிறது. சோழப் பேரரசு ராஜ்ஜியத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தலைப் பற்றி கமல்ஹாசன் ஒரு முன்னுரை வழங்கினார். சோழ சாம்ராஜ்யத்தின் பேரரசர் சுந்தர சோழர் (பிரகாஷ் ராஜ்) நோயுடன் போராடி வருவதால், அதிபர் பெரிய பழுவேட்டரையர் (சரத்குமார்) மற்றும் அவரது இளம் மனைவி நந்தினி (ஐஸ்வர்யா ராய்) ஆகியோர் தங்கள் மருமகன் மதுராந்தகனை (ரஹ்மான்) அடுத்த அரசனாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், சோழ சாம்ராஜ்யத்தின் இளவரசர் ஆதித்த கரிகாலன் (விக்ரம்), சாம்ராஜ்யத்தின் வாரிசாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டவர்.

மேலும் அவர் அடுத்தடுத்த ராஜ்ஜியங்களை கைப்பற்றுவதில் மும்முரமாக இருக்கிறார். அவரது இளைய சகோதரர் அருள்மொழி வர்மன் அல்லது பொன்னியின் செல்வன் (ஜெயம் ரவி), தனது தந்தையின் / மன்னரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, நாட்டைக் கைப்பற்றி சோழரின் ஆட்சியின் கீழ் கொண்டு வர இலங்கை செல்கிறார். இதற்கிடையில் சுந்தர சோழரின் மகள் குந்தவை சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகரங்களில் ஒன்றான பழையாறையில் இருக்கிறாள். சாம்ராஜ்யத்தின் இத்தகைய பாதிக்கப்படக்கூடிய நேரத்தில், பாண்டிய சாம்ராஜ்யத்திலிருந்து (தென்நாட்டின் மற்றொரு சக்திவாய்ந்த பேரரசு, 10 ஆம் நூற்றாண்டில் சோழர்களால் வென்றது) சோழ தேசத்தில் ஊடுருவி, அவர்கள் சுந்தர சோழரையும் அவரது மகன்களையும் கொல்ல திட்டமிட்டுள்ளனர்.

ஆதித்த கரிகாலன் தனது நம்பிக்கைக்குரிய நண்பன் வந்தியத்தேவனை கடம்பூர் கோட்டைக்கு எதிரிகளை உளவு பார்ப்பதற்காக அனுப்புவதில் இருந்து படம் தொடங்குகிறது. அவர் சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களையும் பழையாறையில் உள்ள குந்தவை மற்றும் தஞ்சாவூரில் உள்ள சுந்தர சோழரிடம் தெரிவிக்க வேண்டும். இப்படியாக வந்தியத்தேவனின் பயணம் தொடங்குகிறது, அவருடைய கண்ணோட்டத்தில் பொன்னியின் செல்வன் கதை விவரிக்ககப்படுகிறது. சுந்தர சோழருக்கு எதிராக பெரிய பழுவேட்டரையர் மற்றும் நந்தினி ஆகியோரின் இரகசிய சதி பற்றி வந்தியதேவன் அறிந்திருக்கிறார். இது குறித்து அவர் சுந்தர சோழரிடம் செய்தியை அனுப்புகிறார், அதன் செயல்பாட்டில் சின்ன பழுவேட்டரையர் (பார்த்திபன்) மூலம் சிறைபிடிக்கப்படுகிறார். வரப்போகும் ஆபத்தைப் பற்றி குந்தவைக்குத் தெரியப்படுத்த அவர் தஞ்சாவூரில் இருந்து தப்பி பழையாறை அடைகிறார். தாழ்த்தப்பட்ட வீரனுக்கும் சோழநாட்டு இளவரசிக்கும் இடையே காதல் மலர்கிறது. இருப்பினும், வந்தியத்தேவனை கடல் கடந்து இலங்கைக்கு சென்று அருள்மொழி வர்மனை அழைத்து வரும்படி கட்டளையிடுகிறாள் குந்தவை. எனவே, வாணர் குலத்தின் வீரன் தன் பயணத்தைத் இலங்கை நோக்கி தொடர்கிறான்.

இதற்கிடையில், அருள்மொழி வர்மனைக் கொல்ல பாண்டியர்களும் இலங்கைக்கு வருகிறார்கள். அத்தகைய ஒரு முயற்சியை யானை மீது மர்மமான வயதான பெண் தடுத்து நிறுத்துகிறார். பொன்னியின் செல்வன் வந்தியத்தேவனிடம் அவள் ஊமை ராணி என்றும், அவர் தன்னை காப்பாற்றுவது இது முதல்முறையல்ல என்றும் கூறுகிறார். ஆனாலும் ஊமை ராணி குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் சொல்கிறார். வந்தியத்தேவன் அருள்மொழியை தன்னுடன் பழையாறைக்குத் திரும்ப அழைத்துச் சொல்லும் போது, சோழப் பேரரசின் ஒரு கடற்படை இளவரசரைக் கைது செய்து திரும்ப அழைத்துச் செல்கிறது. அரசனிடம் இருந்தே அவர்களுக்கு உத்தரவு உள்ளது. அதற்கு மேல், ஆதித்த கரிகாலனும் தன் நண்பன் பார்த்திபேந்திரன் பல்லவனை (விக்ரம் பிரபு) அருள்மொழியை காஞ்சிபுரத்திற்கு அழைத்துச் செல்ல அனுப்புகிறான். பல குழப்பங்களுக்குப் பிறகு, அருள்மொழி தன்னை சோழர்களின் கடற்படையிடம் சரணடைய முடிவு செய்கிறான், அதுதான் நியாயமான முடிவு. ஆனால் பாண்டியர்கள் தலையிடும்போது விஷயங்கள் ஒரு பெரும் திருப்பத்தை எடுக்கின்றன மற்றும் பாண்டியர்களுக்கும் அருள்மொழிக்கும் இடையே கப்பலில் போர் ஏற்படுகிறது. அதில் வந்திய தேவனும் அருன்மொழியும் கடலில் மூழ்கின்றனர். அத்துடன் முதல்பாகம் முடிவுக்கு வருகிறது.

அடுத்து என்ன நடக்கும்?

முதல் பகுதிக்கும் இரண்டாவது பகுதிக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், 2-வது பகுதியில் நீண்ட பாடல்கள் இல்லை. பொன்னியின் செல்வன் 1 சில அற்புதமான காட்சிகளுடன் ஐந்து பாடல்களைக் கொண்டிருந்தாலும், பொன்னியின் செல்வன் 2 இல் அதற்கெல்லாம் நேரம் இருக்காது. முதல் பகுதி நாவல் தொடரின் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே உள்ளடக்கியது, மேலும் 2-ம் பாகத்தில் கதையின் பெரும்பகுதியை முடிக்க மணிரத்னத்திற்கு மூன்று மணி நேரம் மட்டுமே உள்ளது. இதனால் பாடல்கள் இருந்தாலும், அது பின்னணியில் இடம்பெறும் வகையில் அமைந்திருக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை, "சின்னஞ்சிறு நிலவே" பாடல் மட்டுமே காட்சிக் காட்சிகள் இருக்கலாம்.

மற்றொரு பெரிய வித்தியாசம் காட்சிகளின் வேகம். முதல் பாகம் சற்று தொய்வாகத் தெரிந்தால், இங்கேயும் அதே வேகத்தில் அதையே எதிர்பார்க்கலாம். இரண்டாம் பாகத்தில் அருள்மொழி சோழ நாட்டில் இருப்பார் என்பதால் இலங்கை அத்தியாயம் முடிந்து விட்டது என்பது நல்ல விஷயம். முதல் பகுதிக்கு எதிரான மற்றொரு விமர்சனம் என்னவென்றால், அதில் பஞ்ச் இல்லை. நந்தினி மற்றும் கரிகாலனின் சந்திப்பு, சுந்தர சோழர் மற்றும் ஊமை ராணியின் சந்திப்பு, மதுராந்தகனின் பின்னுள்ள மர்மத்தின் அவிழ்தல் போன்ற பல சாத்தியமான நாடக தருணங்களுடன், இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தை விட அதிக சுவாரஸ்யமான தருணங்கள் இருக்கும் என்று நம்பலாம்.

எல்லாவற்றிற்கும் மேலாக, பொன்னியின் செல்வனின் காவியத்தையும் நீண்ட கதையையும் மணிரத்னம் எவ்வளவு திறமையாக மூன்று மணி நேரத்தில் முடிக்கிறார் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment