scorecardresearch

புஷ்பா, அன்பறிவு, தி டெண்டர் பார் : வார இறுதியில் எந்த படத்தை பார்க்க போகிறீர்கள்?

Tamil Cinema Update : ஊரடங்கு நேரத்தில் பொழுதுபோக்கிற்காக இந்த வாரம் 3 பெரிய படங்கள் உங்களை விருப்ப பட்டியலில் இடம்பெறும் என்று உறுதியாக சொல்ல முடியும்.

Tamil Weekend Movie Update From OTT Platform : இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால பல மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி கிடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த வேளையில் பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு என்பது முக்கிய அவசியமாக உள்ளது. இந்த நேரத்தில் மக்களை கவர்வதற்காக ஒடிடி இணையதளம் பல படங்களை தங்களது கைவம் வைத்துள்ளது.  

அதன்படி இந்த வாரம் 3 பெரிய படங்கள் உங்களை விருப்ப பட்டியலில் இடம்பெறும் என்று உறுதியாக சொல்ல முடியும். 1. ஆயுஷ்மான் குரானா-வாணி கபூர் நடித்த சண்டிகர் கரே ஆஷிகி,  இந்த படம் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ளது. 2. அல்லு அர்ஜுனின் புஷ்பா. இந்த படம் ஏற்கனவே தியேட்டரில் வெளியாகி ஹிட் அடித்துள்ள நிலையில், தற்போது அமேசான் பிரைம் வீடியோவில், வெளியிடப்பட்டுள்ளது. 3.  ஜார்ஜ் குளூனி இயக்கிய தி டெண்டர் பார் பென் அஃப்லெக் நடித்த படத்திலிருந்து வேறுபட்ட கதையம்சம்கொண்ட படம்.

சண்டிகர் கரே ஆஷிகி: நெட்ஃபிக்ஸ் (Netflix)

கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியான சண்டிகர் கரே ஆஷிகி படத்தில் ஆயுஷ்மான் குரானா மற்றும் வாணி கபூர் ஆகியோர் முதன்மை கேரக்டரில் நடித்துள்ளனர். அபிஷேக் கபூர் இயக்கியுள்ள இந்த படம் காதல் ரெமான்டிக் கலந்த படம்.  பளு தூக்கும் மனு (குரானா) மற்றும் ஜூம்பா டீச்சர் மான்வி பிரார் (கபூர்) இருவரும் காதலிக்கிறார்கள், இதில் மான்வி குறித்து ஒரு உண்மை மனுவுக்கு தெரியவரும்போது பிரச்சனை வெடிக்கிறது. அதன்பிறகு என்ன நடந்தது என்பதே மீதிக்கதை.

புஷ்பா: தி ரைஸ்: அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video)

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா மற்றும் ஃபஹத் பாசில் நடித்த ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம். கடந்த மாதம் திரையரங்கில் வெளியான இந்த படம், தற்போதுவரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தியேட்டருக்குச் செல்ல நீங்கள் தயங்கினால், படம் இப்போது அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டுள்ளது.  

இந்தியன் எக்பிரஸ் திரைப்பட விமர்சகர் மனோஜ் குமார் ஆர் அல்லு அர்ஜுனின் நடிப்பைப் பாராட்டி, தனது 3-ஸ்டார் கொடுத்துள்ளார், “அல்லு அர்ஜுன் தனது வலுவான நடிப்பால் படத்தை தூக்கி நிறுத்துகிறார். அவரின் வித்தியாசமான தோற்றத்தைத் தோற்றைத்தை வெளிப்படுத்தி ஒரு மறக்கமுடியாத நடிப்பை கொடுத்துள்ளார்.

ஜெயில்: அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video)

வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடித்த ஜெயில் திரைப்படம் டிசம்பர் 9, 2020 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. ஆக்‌ஷன்-கிரைம்-த்ரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.  ஆனால் நீங்கள் ஜி.வி. பிரகாஷ் குமாரின் ரசிகராக இருந்தால், அவருடைய நடிப்புக்காக ஜெயில் பார்க்கலாம். இந்த படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடப்பட்டுள்ளது.

கவுன் பனேகி ஷிகர்வதி: ஜீ5 (Zee5)

ஒரு சிறந்த நடிகர்களை ஒன்றாக இணைத்துவிட்டு மோசமான நிகழ்ச்சியை எப்படி செய்வது? கவுன் பனேகி ஷிகர்வதியைப் பார்த்து இதற்கான பதில்லை நீங்கள் பெறலாம். இந்த படத்தில் நசிருதீன் ஷா, சோஹா அலி கான், லாரா தத்தா, கிருத்திகா கம்ரா மற்றும் அனன்யா சிங் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒரு வயதான அரசர் ஒருவர் தனது நான்கு மகள்களை மீண்டும் அழைக்க முடிவு செய்கிறார். அவர்களில் ஒருவருக்கு தனது அரண்மனையைக் கொடுக்க முடிவு செய்கிறார்.. இதற்காக டேபிள் டென்னிஸ், செஸ, சமையல் மற்றும் பல விளையாட்டுகளின் தொடர் மூலம் ஆனால் அரண்மனை யாருக்கு என்பதை அவர் எப்படி முடிவு செய்கிறார்  என்பதே மீதிக்கதை

ஹம்புள் பொலிட்டிஷன் நோக்ராஜ்: வோட் செலக்ட் (Voot Select)

10 எபிசோடு கொண்ட கன்னட நகைச்சுவைத் தொடர் ஒரு ஊழல் மற்றும் மதவாத அரசியல்வாதியான நோக்ராஜ் எம்.எல்.ஏ.வாக இருந்து கர்நாடகாவின் மிகவும் மதிப்புமிக்க முதல்வர் பதவிக்கு போட்டியிடும் வரை பரபரப்பான தனது பயணத்தைத் தொடங்குகிறார். டேனிஷ் சைட், பிரகாஷ் பெலவாடி, கீதாஞ்சலி குல்கர்னி, டிக்கு தல்சானியா, திஷா மதன், வருண் தாக்கூர், ஷாலினி நாராயண் மற்றும் விஜய் செந்தூர் ஆகியோர் நடித்துள்ளனர்.

வெல்லே: அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video)

2019 ஆம் ஆண்டு வெளியான தெலுங்குத் திரைப்படமான ப்ரோச்சேவருவேவருரா திரைப்படத்தின் இந்தி ரீமேக், வெல்லே. மூன்று  நண்பர்கள் சேர்ந்து பள்ளி முதல்வரின் மகளைக் கடத்தத் திட்டமிடுகிறார்கள், ஆனால் அவர் உண்மையில் கடத்தப்பட்டு அவர்கள் மீது பழி வரும்போது அவர்களின் திட்டம் மோசமாகிறது. இது ஒருபுறம் இருக்கு மறுபுறம், ஒரு ஆர்வமுள்ள இயக்குநர் ஒரு பெரிய நடிகருக்கு ஒரு கதை சொல்கிறார்.. ஒரு கட்டத்தில், இரண்டு கதைகளும் ஒரு மையப்புள்ளியில் சந்திக்கும்போது என்ன நடநதது என்பதே இந்த படத்தின் கதை. அஜய் தேவ்கனின் ஆதரவில், கரண் தியோல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் அபய் தியோல், மௌனி ராய் மற்றும் அன்யா சிங் ஆகியோரும் நடித்துள்ளனர்.

அன்பறிவு: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar)

அன்பறிவு என்ற தமிழ் படத்தை அஸ்வின் ராம் இயக்கியயுள்ளார்.  சிறுவயதில் பிறந்த இரட்டையர்கள் அன்பு அறிவு இருவரும் வாலிபத்தில் மீண்டும் சந்திக்கும்போது என்ன நடக்கிறது என்பதை வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது.  இதில் ஒன்று இரத்தக் கறை மற்றும் பழிவாங்கல் நிறைந்தது, மற்றொன்று ஞானமும் அமைதியும் நிறைந்தது. அன்பும் அறிவும் தங்கள் சூழ்நிலையில் இருந்து மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்களின் புதிய சவால்களை அவர்களால் தாக்குப்பிடிக்க முடியுமா?” என்பதை சுவாரஸ்யத்துடன் விளக்கியுள்ள படம் அன்பறிவு. இதில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, காஷ்மீரா பர்தேஷி மற்றும் ஷிவானி ராஜசேகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

டெண்டர் பார்: அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video)

தி டெண்டர் பார் ஜார்ஜ் குளூனி இயக்கியுள்ள படம்ஃ கடந்த  2005 ஆம் ஆண்டு ஜே. ஆர். மோஹ்ரிங்கர் எழுதிய டெண்டர் பார் என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. ஒரு சிறு பையனை (டை ஷெரிடன்) மையமாகக் கொண்டுள்ளது, அவர் தனது தந்தைக்கு மாற்றாகத் தேடுகிறார், நியூயார்க் நகர வட்டு ஜாக்கி, அவரது மகன் பல வருடங்களுக்கு முன்பு காணாமல் போகிறார்.அதன்பிறகு என்ன நடந்தது என்பதே மீதிக்கதை. இப்படத்தில் டேனியல் ராணியேரி, லில்லி ரபே மற்றும் கிறிஸ்டோபர் லாயிட் ஆகியோரும் நடித்துள்ளனர். டெண்டர் பார் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது. மற்றும் ராட்டன் டொமாட்டோஸில் 50% மதிப்பீட்டைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema what to watch this weekend available including pushpa and anbarivu

Best of Express