கமல்ஹாசனின் தீவிர ரசிகர் யார் என்பது குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – கௌதம் வாசுதேவ் மேனன் இடையே கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.
கெளதம் வாசுதேவ் மேனன் – லோகேஷ் கனகராஜ் இருவரில் யார் சிறந்த இயக்குனர் என்று விவாதம் நடந்துவது சரியாக இருக்காது. ஏனென்னால் கடந்த 2006-ம் ஆண்டு கமல்ஹாசனுக்கு வேட்டையாடு விளையாடு என்ற மாபெரும் வெற்றியை கொடுத்தவர் கௌதம் மேனன் என்றால், 4 வருட இடைவெளிக்கு பிறகு வந்த கமல்ஹாசனுக்கு கடந்த ஆண்டு விக்ரம் என்ற மெகாஹிட் படத்தை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ்.
இதில் காதல் காட்சிகளுக்கு பெயர் பெற்ற கௌதம் மேனனிடம் இருந்து இப்படி ஒரு இன்வஸ்டிகேஷன் த்ரில்லர் படத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை என்று சொன்னாலும் கூட அந்த படத்திலும், கமல் - காமலினி முகர்ஜி மற்றும் கமல் ஜோதிகா இடையே அழகான காதலையும் வெளிப்படுத்தியிருப்பார் கௌதம் மேனன். அதேபோல் 4 வருடங்களுக்கு பிறகு விக்ரம் படத்தில் கமல்ஹாசனுக்கு இதுவரை இல்லாத அதிரடி ஆக்ஷன் காட்சிகளை கொடுத்தவர் லோகேஷ்.
அடிப்படையில் இவர்கள் இருவருமே கமல்ஹாசனின் தீவிர ரசிகர்கள். இதில் லோகேஷ் கனகராஜ் இதுவரை 4 படங்களை மட்டுமே இயக்கியுள்ள தனது முதல் 3 படங்களிலுமேக கமல்ஹாசனின் ரெப்ரன்ஸாக ஒரு கேரக்டரை வைத்திருந்தார். இதில் மாநகரம் படத்தில் சந்திப் கிஷான் (சத்யா - கமல்) கைதி கார்த்தி (விருமாண்டி கமல்) மாஸ்டர் விஜய் (நம்மவர் கமல்) என்று சொல்லலாம.
அதேபோல் விக்ரம் படத்திற்கு முன்பு கமல்ஹாசனுக்கு வசூல் ரீதியாக பெரிய வெற்றிப்படமாக அமைந்த வேட்டையாடு விளையாடு படம் 17 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது. இந்த ரீ-ரிலீஸ் காரணமாவே தற்போது கௌதம் – லோகேஷ் இருவரில் யார் கமலின் தீவிர ரசிகர் என்ற விவாதம் எழுந்துள்ளது. இதில் சிலர் கௌதம் மேனனுக்கு ஆதரவாகவும், சிலர் லோகேஷ் கனகராஜ்க்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.
இதில் பலரும் ஆச்சரியப்படும் விதமாக சினிமா தயாரிப்பாளர்கள் இருவர் இந்த விவாதத்தில் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்த இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆச்சரியப்படும் விதமாக, இரு திரைப்பட தயாரிப்பாளர்களும் விவாதத்தில் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர், இது செயல்பாட்டில் சமூக ஊடக வெறியை ஏற்படுத்தியது.
ஒரு ட்விட்டர் வாசி ஒருவர் தனது பதிவில், எனக்கு என்னமோ சிறந்த ரசிகர் இயக்குனருக்கான போரில் கவுதம் மேனன் வென்றது போல் தெரிகிறது. லோகேஷ் இதை சொல்வதற்கு மன்னிக்கவும் என்று குறிப்பிட்டிருந்தார். இதை பார்த்த லோகேஷ் உடனடியாக சந்தேகமே வேண்டாம் ஜிவிஎம் சார்தான் என்று பதில் அளித்துள்ளார். ஆனாலும் இது தொடர்பான விவாதம் இன்னும் முடியாத நிலையில், தான் மட்டும் மிகவும் தீவிரமான ரசிகர் அல்ல என்பதை கௌதம் மேனன் ஒப்புக்கொண்டார்.
அதே போல் நானும் ‘நாயகன் மீண்டும் வாரான்’ வரும் வரை விக்ரம் படத்தின் வெற்றியை தான்டி மேல் உயர வேண்டும். ஒரு நல்ல சவாலாக இருக்கும் ஆனா இந்த சண்டையில எந்த சட்டையும் கிழிக்கப்படாது அன்பு மட்டுமே இருக்கும் என்று கௌதம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு லோகேஷ் தனது பதிவில், உங்களுக்கு அன்பும் மரியாதையும் அதிகம் சார்! இப்போது வேட்டையாடுவிளையாடு படத்தின் மறுவெளியீட்டுக்கான வரவேற்பைப் பார்த்து சிலிர்ப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. என்று கௌதமின் பதிவை மேற்கோள் காட்டி ட்வீட் செய்யும் போது லோகேஷ் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கைகளின்படி, தமிழகத்தில் பிஸியான வார இறுதி நாளாக இருந்தாலும், கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு ஜூன் 23 அன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டபோது சினிமா ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“