scorecardresearch

யார் நீ… குரல் அதிகமா இருக்கே… பட ப்ரமோஷனில் கோபப்பட்ட யோகி பாபு

யோகி பாபு லீடு ரோலில் நடித்துள்ள படம் பொம்மை நாயகி. ஷான் இயக்கியுள்ள இந்த படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ், யாழ் ஃபிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

Yogi Babu says I am a comedian
பொம்மை நாயகி செய்தியாளர் சந்திப்பில் யோகி பாபு

பொம்மை நாயகி படத்தின் மூலம் எமோஷ்னல் ஹீரோவாக மாறியுள்ள நடிகர் யோகிபாபு, பத்திரிக்கையாளர் சந்திதப்பில் நடந்துகொண்ட விதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சின்னத்திரையில்  காமெடி நடிகராக நடித்து அமீர் இயக்கிய யோகி படத்தின் மூலம் திரைத்துரையில் அறிமுகமானவர் யோகி பாபு, அதனைத் தொடர்ந்து பல படங்களில் காமெடி நடித்த இவர், தற்போது சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இதில் இவர் நடித்த, மண்டேலா, கோலமாவு கோகிலா, தர்மபிரபு, உள்ளிட்ட படங்களில் லீடு ரோலில் நடித்துள்ளார்.

அந்த வகையில் தற்போது அவர் லீடு ரோலில் நடித்துள்ள படம் பொம்மை நாயகி. ஷான் இயக்கியுள்ள இந்த படத்தை நீலம் புரொடக்ஷன்ஸ், யாழ் ஃபிலிம்ஸ் நிறுவணம் இணைந்து தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், வரும் பிப்ரவரி 3-ந் தேதி இந்த படம் வெளியாக உள்ளது.

இந்த படம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த யோகிபாபு, பொம்மை நாயகி படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். என்று கூறினார். இதனிடையே பத்திரிக்கையாளர் ஒருவர், தோனி புரோடக்ஷனில் நீங்கள் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது  என்ற கேள்விக்கு நீங்கள் சொல்லித்தான் எனக்கே தெரியும் என்று கூறியுள்ளார்.

அப்போது பெரிய படத்தின் ப்ரமோஷனுக்கு நீங்கள் வருவதாகவும், சின்ன படத்தின் ப்ரமோஷனுக்கு நீங்கள் வருவதில்லை என்றும் கூறப்படுகிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் யார் நீ குரல் அதிகமா இருக்கே, இது சின்ன படம்தான் இப்போ ப்ரமோஷனுக்கு நான் வரலயா? வாரிசு பெரிய படம் அந்த படத்தின் ப்ரமோஷனுக்கு நான் போகவில்லை.

தயாரிப்பாளர் போன் செய்யும்போது நான் வெளியில் ஷூட்டிங்கில் இருந்தால் வர முடியாது. வர முடியாது என்று இல்லை நானும் சின்ன படங்களில் இருந்துதான் பெரிய படங்களுக்கு வந்துள்ளேன் என்று கூறி இனிமேல் குரலை அதிகமா உயர்த்தி பேசாதீங்க என்று சொல்லிவிட்டு சென்றுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil cinema yogi babu bommi nayagi movie promotion in tamil