தமிழ் சினிமாவின் இளம் நடிகராக அசோக் செல்வன்- நடிகை கீர்த்தி பாண்டியன் திருமணம் நெல்லையில் பிரம்மாண்டமாக நடைபெற்ற நிலையில், இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில வைரலாகி வருகிறது.
/indian-express-tamil/media/media_files/ddmExBuotl0xRjB8VQqF.jpg)
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர் அசோக் செல்வன். அதனைத் தொடர்ந்து, தெகிடி, ஓ மை கடவுளே, பீட்சா 2, மன்மத லீலை, ஹாஸ்டல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள இவர், சமீபத்தில் வெளியான போர் தொழில் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.
/indian-express-tamil/media/media_files/du7q2Gq06YdwbZCPRfAX.jpg)
போர் தொழில் படம் அசோக் செல்வனுக்கு பெரிய வெற்றியை கொடுத்ததை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வரும் இவர், பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் கீர்த்தி பாண்டியனை காதலித்து வந்துள்ளார். தும்பா மற்றும் அன்பிற்கினியாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கீர்த்தி பாண்டியன், பெரிதாக பிரபலமாகவில்லை.
/indian-express-tamil/media/media_files/iTYpB8o7CnywO4o6gfMS.jpg)
இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரம் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் இதில் கலந்துகொண்ட நிலையில், இன்று செப் 13 திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரியில் அருண் பாண்டியனின் பண்ணை வீட்டில் நடைபெற்றது. திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.
/indian-express-tamil/media/media_files/qcvdDdYf5K92tO78GuRb.jpg)
இயற்கை விவசாயத்தில் தீவிர ஆர்வம் கொண்ட நடிகர் அருண் பாண்டியன் வயல்வெளிகளுக்கு மத்தியில் மேடை அமைத்து இயற்கை சூழலில் திருமணத்தை நடத்தியுள்ளார். அதேபோல் திருமண விருந்தையும் இயற்கை உணவு வகைகளாகவே செய்து அசத்தியுள்ளார். அருண் பாண்டியன் இந்த முயற்சி மற்றும் விருந்தின் மெனு பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
/indian-express-tamil/media/media_files/RvV4uRDgpP5qhamKIgb3.jpg)
திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பின்னர் நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது. புதுமணத் தம்பதிக்கு ரசிகர்கள், திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.