New Update
/
இணையதளத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் இன்றைய காலக்கட்டத்தில் சினிமா மற்றும் சின்னத்திரை ரசிகர்கள் தங்களின் விருப்பமான ஹீரோ ஹீாரோயின் ஆகியோரின் விபரங்களை தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். தங்களுக்கு பிடித்தமான நட்சத்திரத்தின் ஒரு சிறு தகவல் கூட அவர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுப்பது போன்று எடுத்துக்கொள்வார்கள்.
இப்படி இருக்கும் ரசிகர்களை சிந்திக்க வைக்கும் முனைப்புடன் இணையத்தில் அவ்வப்போது பல பதிவுகள் வருவது வழக்கம். அந்த வகையில் வெளியாவது தான் நடிகர் நடிகைகளின் சிறுவயது புகைப்படங்கள். ஒரு நட்சத்திரத்தின் சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு இந்த நடிகரை யார் என்று தெரியுமா? இவரை யார்னு கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் என்று சொல்வார்கள்.
அந்த வகையில் தற்போது ஒரு நடிகரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. சின்னத்திரை சீரியல்கள் மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகராக இருக்கும் இந்த நட்சத்திரம் யார் என்று உங்களுக்கு தெரிகிறதா? அவர் நடிகர் கவின். விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் கவின்.
ஒரு சில திரைப்படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வந்த கவின், 2019-ம் ஆண்டு வெளியான நட்புன்னா என்னானு தெரியுமா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன்பிறகு கொரோனா காலக்கட்டத்தில் வெளியான இவரின் லிப்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியை கொடுத்தது, 2023-ம் ஆண்டு வெளியான டாடா படம் கவினுக்கு பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்துடுத்து இவருக்கு பட வாய்ப்பு குவிந்தது.
சமீபத்தில் வெளியாக கவினின் ஸ்டார் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்து வெற்றிமாறன் தயாரிப்பில், கவின் நடிக்கும் வாய்ப்பினை பெற்று கொடுத்துள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்க உள்ளார். அதேபோல் ஆகாஷ்வானி என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார். தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகராக வலம் வரும் கவின், தமிழ் சினிமாவில் தனக்கென முக்கிய இடத்தை பிடித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.