/indian-express-tamil/media/media_files/2025/09/05/yuvan-shankar-raja-2025-09-05-15-16-03.jpg)
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக பல வெற்றிப்படங்களை கொடுத்த யுவன் சங்கர் ராஜா, பல புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கும் நிலையில், அவரின் 50-வது மற்றும் 100-வது படத்தை இயக்கியது ஒரே இயக்குனர் தான். அதுமட்டும் இல்லாமல் யுவன் சங்கர் ராஜா இசைமைத்த 50-வது படம் தான் அந்த இயக்குனர் இயக்கிய முதல் படம். அந்த இயக்குனர் யார் தெரியுமா?
1997-ம் ஆண்டு சரத்குமார், பார்த்திபன் நடிப்பில் வெளியான அரவிந்தன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தான் யுவன் சங்கர் ராஜா. தொடர்ந்து, வேலை, கலாட்டா கல்யாணம், பூவெல்லாம் கேட்டுப்பார், உனக்காக எல்லாம் உனக்காக என 4 படங்களை கொடுத்த யுவன், 2001-ம் ஆண்டு அஜித் நடிப்பில் தீனா படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படமும் பெரிய வெற்றியை பெற்றது.
அதே ஆண்டு பாலாவின் பெரிய வெற்றிப்படமான நந்தா படத்திற்கும் இசையமைத்த யுவன்சங்கர் ராஜா, ஏ.ஆர்,முருகதாஸ், அமீர், செல்வராகவன், விஷ்ணுவர்த்தன், உள்ளிட்ட பல முன்னணி இயக்குனர்களின் முதல் படத்திற்கு இசை அமைத்துள்ளார். அந்த படங்களின் பாடல்களும் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. தமிழ் மட்டும் இல்லாமல், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தனது இசையால் பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ள யுவன் சங்கர் ரராஜாவின் 50 மற்றும் 100-வது படம் எது தெரியுமா?
1997-ம் ஆண்டு வெளியான அரவிந்தன் படத்தின் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கிய யுவன் சங்கர் ராஜா, 2007-ம் ஆண்டு வெளியான சென்னை 600028 படத்தின் மூலம் தனது இசையமைப்பில் 50 படங்களை நிறைவு செய்திருந்தார். ஆனால் இதுதான் யுவனின் 50-வது படம் என்பது மற்றவர்களுக்கு மட்டும் இல்லாமல், அந்த படக்குழுவுக்கே அப்போது தெரியாது என்றும், தெரிந்திருந்தால், விமர்சையாக கொண்டாடி இருக்கலாம் என்றும் அப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
சென்னை 600028 படத்தின் மூலம் தான் வெங்கட் பிரபு தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இவர் இயக்கிய 5-வது படம் தான் பிரியாணி. 2013-ம் ஆண்டு வெளியான இந்த படம் தான் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த 100-வது படம். வெங்கட் பிரபு இதுவரை 12 படங்களை இயக்கியுள்ளார். இதில் மன்மதலீலை படத்தை தவிர மற்ற அனைத்து படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா தான் இசை. மன்மத லீலை படத்திற்கு அவரது தம்பி பிரேம்ஜி அமரன் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.