கல்யாண நாளை கொண்டாட தயாராகும் பரணி.. கடுப்பில் இருக்கும் சண்முகம் - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
அண்ணா சீரியலின் சனிக்கிழமை எபிசோடில் ரத்னா, இசக்கி என இருவரும் வருத்தத்தில் இருக்க ஷண்முகம் கவலையில் இருக்கும் நிலையில் இன்று, சண்முகம் கவலையில் இருக்க கனி பரண் மீது இருந்து பழைய புத்தகத்தை எடுத்து கொடுக்க சொல்லி கேட்க ஏற்கனவே படிச்சு முடிச்ச புக் எதுக்கு என்று திட்டி விடுகிறான், பிறகு பரணி புத்தகத்தை எடுத்து கொடுப்பதாக சொல்லி எடுக்க அப்போது அவளது கல்யாண போட்டோவை பார்க்கிறாள்.
கல்யாண நாள் நெருங்கி விட்டது என்று அறியும் பரணி சண்முகத்தை ஹாஸ்பிடலில் டிராப் செய்ய சொல்லி அழைக்க அவன் வர மறுக்க பரணி திட்டி அழைத்து செல்கிறாள். பிறகு சாயங்காலம் ஒரு புடவை வாங்கிட்டு வா என்று சொல்ல ஷண்முகம் சரி என்று சொல்கிறான். பரணி எதுக்கு புடவைனு கேட்க மாட்டியா என்று கேள்வி கேட்க ஷண்முகம் எதுக்கு கேட்ப கட்டிக்க தானே என்று கடுப்பாக பதில் சொல்லி அங்கிருந்து நகர்கிறான்.
இதை தொடர்ந்து பாக்கியம், இசக்கி ஆகியோர் தடபுடலாக ரெடியாகி கொண்டிருக்க சௌந்தரபாண்டி என் நெஞ்சு மேலே ஏறி நின்னு கல்யாணம் பண்ணான். அவன் கல்யாண நாளை கொண்டாட என் சொத்தை அழிக்கறீங்களா என்று ஆவேசப்பட இசக்கி உங்க சொத்தை அழிக்கல, அவர் தான் பணம் அனுப்பினார் என்று பதிலடி கொடுக்கிறாள். பிறகு சீருடன் வீட்டிற்கு வர அதை பார்த்த சண்முகத்திற்கு கல்யாண நாள் என்ற ஞாபகம் வருகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லாரியில் அடிபட்டு இறந்த துங்கா.. ஐஸ்வர்யாவால் நடக்க போகும் விபரீதம் என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம் சீரியலில் சனிக்கிழமை எபிசோடில் துங்கா தீபா மற்றும் கீதா என இருவரையும் கடத்தி கார்த்தியை மிரட்டிய நிலையில் இன்று, துங்காவின் குடோனுக்குள் என்ட்ரி கொடுத்த கார்த்திக் துங்காவை எதிர்த்து கடுமையாக சண்டை போடுகிறான். ஒரு கட்டத்தில் துங்கா அடி தாங்க முடியாமல் கார்த்தியிடம் இருந்து தப்பி ஓடி வர லாரியில் அடிபட்டு உயிர் இழக்கிறான்.
இதை தொடர்ந்து இங்கே கச்சேரி நடக்கும் இடத்தில் தீபாவிற்காக காத்திருக்கின்றனர். ஜானகி தீபா வர வேண்டும், அவ பாட வேண்டும். அது அவளோட அப்பாவின் நீண்ட நாள் கனவு என கண் கலங்குகிறாள். கார்த்திக் தீபாவை மீட்டு அழைத்து வருகிறான் என்ற தகவல் கிடைக்க அனைவரும் சந்தோஷம் அடைகிறார்கள். இதை எல்லாம் மாறுவேடத்தில் வந்துள்ள ஐஸ்வர்யா கவனிக்கிறாள்.
இதற்கிடையில் இந்த கச்சேரி நடக்க கூடாது, முறையாக வரி கட்டவில்லை என வருமானவரி துறையினர் வந்து விட ஜானகி இதை அறிந்து இந்த கச்சேரி கண்டிப்பா நடக்கணும். என் பொண்ணு பாடணும் என அவர்களது காலில் விழுந்து கெஞ்ச அனுமதி கொடுக்கின்றனர். இதை தொடர்ந்து உள்ளே நுழையும் போலீஸ் ஐஸ்வர்யா துப்பாக்கியுடன் தப்பி வந்ததாக விஷயத்தை சொல்ல அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்கள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“