முடிவுக்கு வந்த பேரன்பு : க்ளைமேக்ஸில் நடந்தது என்ன?

ஜீ தமிழில் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பேரன்பு சீரியல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் க்ளைமேக்ஸ் எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்

ஜீ தமிழில் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பேரன்பு சீரியல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் க்ளைமேக்ஸ் எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்

author-image
WebDesk
New Update
Peranbu

பேரன்பு சீரியல்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 3 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பேரன்பு. பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் இன்று தனது இறுதி பயணத்தை தொடங்கியது. கிளைமாக்ஸ் வாரத்தில், கார்த்திக், ஷன்மதி விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கும் நிலையில் ஷண்மதியின் ஆசைப்படி வெளிநாட்டில் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது.

Advertisment

ஆனால் இப்போதிருக்கும் சூழ்நிலையில் 6 மாதத்துக்கு எதுவும் செய்ய முடியாது என்று சொல்ல கார்த்திக் இதை கேட்டு விடுகிறான், இதுவரை இவளது மனது மாறாத நிலையில் உடனடியாக ஷண்மதிக்கு விவாகரத்துக்கு கொடுத்து அவளை படிக்க வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்க முடிவெடுக்கிறான்.

இது குறித்து நீதிபதியிடம் பேசி விவகாரத்தையும் வாங்கி விட இறுதியில் நீதிபதி கார்த்தி தன்னை சந்தித்து பேசிய விஷயத்தை சொல்ல ஷண்மதி அவனின் காதலை புரிந்து கொள்கிறாள், இருந்தாலும் வீட்டில் இருந்து கிளம்பும் போது ராஜேஸ்வரி அவள் வெளிநாட்டில் படிக்க தேவையான ஏற்பாடுகள் செய்து வைத்திருப்பதை சொல்லி அவளை வீட்டிற்கு அழைத்து சென்று விட கிளம்புகிறாள்.

ஷண்மதி, வானதி இருவரும் காரில் சென்று கொண்டிருக்கும் போது எம்.பி மனைவி ஷண்மதியை கொல்ல வர ராஜேஸ்வரி கத்தி குத்து வாங்கி உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்படுகிறாள். இப்படியான நிலையில் கார்த்திக், ஷன்மதி வாழ்க்கையில் ஒன்று சேர போவது எப்படி என்ற காட்சிகளுடன் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

Advertisment
Advertisements

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Serial Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: