Advertisment

லியோ தியேட்டர் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு: ஜெயிலர் வசூலை முறியடிக்க வாய்ப்பு?

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான திரைப்படங்கள் வரவேற்பை பெற தவறிவிட்டதால், தளபதி விஜயின் லியோ படத்தை மீண்டும் திரையிட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
sadr

தளபதி விஜய் லியோ

தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியானதால் பல திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்ட தளபதி விஜயின் லியோ படம் மீண்டும் 100 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19-ந் தேதி வெளியான படம் லியோ. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் மேனன் என இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது.

ஆயுதபூஜை விடுமுறையை குறி வைத்து வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் உலகளவில் சுமார் 500 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை படைத்தது. ஆனாலும் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் வசூலை (604 கோடி) லியோ முறியடிக்கும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த விஜய் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் ஏற்பட்டிருந்தது.

இதனிடையே நவம்பர் 12-ந் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு நவம்பர் 10-ந் தேதி புதிய படங்கள் வெளியானதால், தமிழகத்தில் பல தியேட்டர்களில் இருந்து லியோ படம் தூக்கப்பட்டு புதிய படங்கள் திரையிடப்பட்டது. இதில் கார்த்தி நடிப்பில் வெளியான ஜப்பான் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறிவிட்டது. அதேபோல் எஸ்.ஜே.சூர்யா – லாரன்ஸ் கூட்டணியில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நகரங்களில் மட்டும் வரவேற்பை பெற்று வருகிறது.

இதே தினத்தில் வெளியாக விக்ரம் பிரபுவின் ரெய்டு திரைப்படமும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற தவறிவிட்டது. இதில் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை தீபாவளி விடுமுறை நாட்களிலேயே பலரும் பார்த்துவிட்டதால், 2-வது வாரத்தில் படத்திற்கான வரவேற்பு குறைய தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 100-க்கு மேற்பட்ட திரையரங்குகளில் விஜயின் லியோ படத்தை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்துள்ளனர்.

நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை தினம் என்பதால் வந்தவரை வரட்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் லியோ படத்தை மீண்டும் திரையிட்டுள்ளதால், இன்று ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட லியோ திரைப்படம், அடுத்த வாரம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் வசூலை முறியடிக்க லியோ படத்திற்கு இன்னும் சில கோடிகளே தேவை என்பதால், லியோ சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Thalapathy Vijay Tamil Cinema Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment