திருச்சி கல்யாணராமன் போன்றவர்கள் இப்படி பேசுவதால்தான் பார்பனர்களையும் பார்ப்பனீயத்தையும் அட்டாக் பண்றாங்க என்று நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பேசியுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோவையில் நடந்த பிராமணர்கள் மாநாட்டில், பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே, நடிகர் பாஸ்கி மற்றும் திருச்சி கல்யாணராமன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். இவர்கள் பேசிய வீடியோ காட்சிகள் வைரலாக பரவிய நிலையில், திருச்சி கல்யாணராமன் பேச்சுக்கு பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில், நான் ஒரு வீடியோ பார்த்தேன். இது சில வருடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது அல்ல. ஜனவரி மாதம் தான் எடுக்கப்பட்டது. முதலில் ஒரு வீடியோ க்ளிப்பை பார்த்தேன். ஆனால் இதை மட்டும் வைத்துக்கொண்டு அறகுறையாக எதையும் செய்யக்கூடாது என்று யோசித்து முழு வீடியோவையும் பார்த்தேன். ஆனால் இந்த வீடியோவை என்னால் முழுவதுமாக பார்க்க முடியவில்லை.
என்ன பேசியிருக்கிறார் அவர்… அதுவும் இந்த மாதிரி ஒரு மாநாட்டில் அவருக்கு மரியாதை கொடுத்து பேச வைத்து இத்தனை பேர் அவர் பேசியதை கேட்டிருக்கிறார்கள். யாருமே எதிர்ப்பு சொல்லவில்லையா.. என்னெனனலாம் வார்த்தை விட்ருக்கார் பாவம் புன்னியம். என்றேல்லாம் பேசியிருக்கிறார். இந்திரா காந்தி பற்றி பேசியிருக்கிறார். அவரை கிணற்குக்கு அந்த பக்கம் உட்கார வைத்தார்கள்.
ஏனென்றால் அவர் தலையை முண்டனம் பண்ணா ஸ்த்ரீ அவங்க. இதெல்லாம் என்ன. அவர் என்ன பேசியிருக்கிறார். இதனால் தான் பார்ப்பனர்களையும் பார்ப்பனீயத்தையும் அட்டாக் பண்றாங்க. சக மனிதனை மனிதனாக மதிக்காத அப்படி என்ன புத்திசாளி என்ன சுப்ரீம் இவர்களுக்கு மட்டும் என்ன இவ்வளவு மூளை. மூளை இருப்பவர்கள் இப்படி பேசுவார்களா? உடல் ரீதியாக மட்டுமல்ல மனரீதியான வன்முறை இது. இதை விட ஒரு வன்முறை இருக்க முடியுமா? இந்த மனநிலை இருப்பதால் தான் சமூதாயத்தில் நாம் ஒற்றுமையுடன் இருக்க முடியவில்லை. தனியாக பார்க்கிறார்கள். கல்யாணராமன் மாதிரயான ஆட்கள் பேசும் பேச்சுக்களால் தான் இப்படி நடக்கிறது. ஒற்றுமை சமத்துவம் என்பதை உதட்டளவில் இல்லாமல் உள்ளத்தில் இருந்து பேச வேண்டும். இன்று இந்த மாதிரியான பேச்சுக்களை பார்த்து நாம் சும்மா இருந்தா வரும் தலைமுறைகள் ரொம்ப ரொம்ப கஷ்பப்படும்.
கல்யாணராமன் பேசியது மிகவும் கண்டிக்க வேண்டிய விஷயம். இதற்காக நான் கண்டனம் தெரிவிக்கிறேன். கடவுள் வழிபாடு நடக்கும் இடத்தில் பணம் பதவி ஜாத இரு மூன்றுமே வேலை செய்கிறது. கடவுள் வழிபாடு நடக்கும் இடத்தில் ஒற்றுமை சமத்துவம் எப்போது இருக்கிறதோ அப்போதுதான் இந்த சமுதாயம் நன்றாக இருக்கும். மூத்த பத்திரிக்கையாளர் ரங்கராஜ் பாண்டே அவர்கள் அடுத்த முறை இந்த மாதிரியான பிராமணர்கள மாநாட்டிற்கு செல்லும்போது இதை பற்றி பேசி இது போன்று தவறான வார்த்தைகளை பயன்படுத்த கூடாது என்ற எண்ணத்தை ஏற்படுத்துங்கள் இது என தாழ்மையான கோரிக்கை என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“