தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நிலையில், அவரைப்பற்றி பேசியுள்ள நடிகர் மீசை ராஜேந்திரன்வடிவேலுவுக்கும் விஜயகாந்துக்கும் இடையிலான பிரச்சினை குறித்து பேசியுள்ளது பெரும் வைரலாக பரவி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், அரசியல் தலைவர் என பன்முகை திறமை கொண்ட விஜயகாந்த், தன்னுடன் நடித்த சக நடிகர்களை அன்பாக நடத்துவதில் பெயர் பெற்றர். அவரை மாதிரி யாராலும் இருக்க முடியாது என்று சினிமா துறையை சேர்ந்த பலரும் கூறி வருவதை இன்றளவும் நாம் கேட்டு வருகிறோம். தற்போது உடல்நிலை சரியி்லலாமல் இருக்கும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த ஆகஸ்ட் 25-ந் தேதி அன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடிய விஜய்காந்துக்கு நடிகர்கள் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் ஆதன் சினிமாஸ் என்ற யூடியூப் சேனல் கேப்டன் 70 என்ற நிகழ்ச்சியை தொடங்கி சக நடிகர்களை அழைத்து கேப்டன் விஜயகாந்த் குறித்து பேசினர். இந்த நிகழ்ச்சி விஜய்காந்த் குறித்து மேலும் தெரிந்துகொள்ள பலருக்கும் உதவியது.
இதனிடையே தற்போது ஆதன் சினிமாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகர் மீசை ராஜேந்திரன், விஜயகாந்த் குறித்து அவருக்கும் வடிவேலுவுக்கும் இடையிலான பிரச்சினை குறித்தும் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில்,
என் ராசாவின் மனசிலே படத்தில் வடிவேலு அறிமுகமானார். அதன்பிறகு விஜயகாந்துடன் சின்னக்கவுண்டர் படத்தில் நடித்தார். அந்த படத்தில் நடித்தபோது வடிவேலுவுக்கு வாய்ப்பு தரவேண்டாம் என்று பலர் கூறியதாகவும், அப்போது விஜய்காந்த், கடைசி வரைஎன்னுடன் வரட்டும் ஒரு சின்ன கேரக்டரில் போட்டுவிடுங்கள் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

நான் ஒரு முறை ஏவிஎம்-ல் டப்பிங் பேசும்போது அங்கு வந்த வடிவேலு ஒரு கேரக்டர் இருக்கிறது என்று என்னை நடிக்கிறீங்களா என்று கேட்டார். நானும் நடிக்கிறேன் என்று சொன்னேன். அப்போவே டைரக்டருக்கு போன் செய்து நான் நடிப்பதாக சொல்லிவிட்டு நாளக்கு ஜிஆர் கார்டன் வந்துடுங்க என்று சொல்லிவிட்டு சென்றார்.
மறுநாள் நான் அங்கு சென்று காத்திருந்தேன். ஷூட்டிங் தொடங்கியது. என்னை கூப்பிடவே இல்லை. அப்போது ஒருவர் வந்து நீங்க நடிக்க வேண்டிய கேரக்டரில் தான் பெசன்ட் நகர் ரவி நடித்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லி நீங்கள் அவரிடம் சென்று கேளுங்கள் என்று சொன்னார். நான் வடிவேலுவிடம் சென்று கேட்டபோது நீங்க விஜயகாந்த் கூட இருக்கீங்க அதனால உங்களுக்கு வாய்ப்பு இல்லை என்று சொன்னார்.
எனக்கு அப்போவே கோபம் வந்தது. ஆனால் கட்டப்படுத்திக்கொண்டு நான் சும்மாதான் இருந்தேன். நீங்களா வந்து நடிக்க கூப்பிட்டு இப்படி அசிங்கப்படுத்துறீங்கள நேத்து நீங்க சொல்லும்போது தெரியலையா நான் விஜயகாந்த் கூட இருக்கேனு இனிமேல் இப்படி யாரையும் பண்ணாதீங்க என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.
அடுத்த 2 நாள் கழித்து கட்சி ஆபீஸ் போனபோது ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தது என்று விஜயகாந்த் கேட்டார். அப்போது நான் நடந்தத சொன்னேன். எதாவது பண்ணிட்டு வந்துருக்கலாம்ல என்று சொல்லிவிட்டு சொன்னார், இதை நான் சொல்லிக்காட்ட கூடாது ஆனால் உன்னை அசிங்கப்படுத்திருக்காரு அதனால சொல்றேன். சின்ன கவுண்டர் படத்தில் நடித்தபோது மாற்று துணி இல்லாம நான் வேட்டி சட்டை வாங்கி கொடுத்தேன் என்று விஜயகாந்த் என்னிடம் சொன்னார்.
வடிவேலு சார் ஆபீஸ் பக்கத்தில் தான் கேப்டனின் அக்கா வீடு. அப்போது அவரின்அக்கா கணவர் இறந்துவிட்டார். அப்போது துக்கத்திற்கு வந்த ஒருவர் வடிவேலு சார் ஆபீஸ் முன்பு காரை நிறுத்தியுள்ளார். அப்போது அங்கு வந்த வடிவேலு காரை எடுங்க என் சொல்ல நம்ம ஆளுங்க எல்லாம் போய் கேப்டன் அக்கா ஹஸ்பண்ட் இறந்துட்டாங்க என்று சொன்னாங்க.
அதை கேட்டு வடிவேலு எந்த கப்பலுக்கு கேப்டன் என்று பேசியதாக தகவல் வெளியானது. அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் வடிவேலுவின் ஆபீஸ் அடித்து நொறுக்கப்பட்டது. ஆனால் அதை யார் செய்தது என்று விஜயகாந்துக்கு தெரியும். ஆனால் அவர் அதை சொல்லவில்லை என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“