தமிழ் திரையுலகில் காலத்தை வென்ற கவிஞர்கள் பட்டியலை எடுத்தக்கொண்டால் அதில் முக்கிய இடம் கவியரசு கண்ணதாசனுக்கு உண்டு. தனது பாடல் வரிகளின் மூலம் வாழ்க்கையின் தத்துவங்களை உணர்த்திய கண்ணதாசன், மனிதனின் அத்தனை உணர்ச்சிகளுக்கும் தனது பாடல் மூலம் பதில் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுக்கு தனது வரிகள் மூலம் பல ஹிட் பாடல்களை கொடுத்த கண்ணதாசன், எழுத்தாளபு, திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் இயக்குனர் என பன்முக திறமை கொண்டனர். பல திறமைகளை உள்ளடக்கி இருந்தாலும் கண்ணதாசன் தனது பாடல்கள் மூலமாகவே மக்கள் மத்தியில் பிரபலமானார்.
மேலும் க்ளாசிக் சினிமா காலத்தில் எப்போதும் பிஸியான கவிஞராக வலம் வந்த கண்ணதாசன், சிவாஜியின் மெகாஹிட் படங்களில் ஒன்றாக தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஒரு செகண்டில் எழுதிய ஒரு பாடல் தற்போதுவரை காலத்தால் அழியாத புகழை பெற்றுள்ளது. இயக்குனர் ஏ.பி.நாகராஜ் இயக்கத்தில் கடந்த 1969-ம் ஆண்டு வெளியான படம் தில்லானா மோகனாம்பாள். சிவாஜி, பத்மினி, நம்பியார் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடலும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படததில் வரும் மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன என்ற பாடல் இப்போது வரும் பல படங்களின் காட்சிகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பாடலுக்கான சுட்சிவேஷனை சொன்னபோது கவியரசர் கண்ணதாசன் கொடுத்த பல பல்லவிகள் இயக்குனர் நாகராஜனுக்கு திருப்தியளிக்கவில்லை. இதனால் வேறு பல்லவி கொடுங்கள் என்று அடுத்தடுத்து கேட்டுக்கொண்டே இருந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.பி.நாகராஜன் கண்ணதாசனுக்கு படத்தின் முழு கதையையும் கூறியுள்ளார். கதையை கேட்ட கண்ணதாசன் உடனடியாக மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன என்ற பல்லவியை எழுதி கொடுத்துள்ளார்.
இந்த வரிகளை படித்து பார்த்த இயக்குனருக்கு மிகவும் பிடித்து போனது. அதே சமயம் படததில் சிவாஜி கேரக்டரில் பெயரான சண்முகம் என்பதை மறைமுகமாக குறிப்பிட வேண்டும் என்று இயக்குனர் கூற, அதற்கு கண்ணதாசன் மாதவா, வேலவா, மாயவா, ஷண்முகா என பாடல் எழுதியுள்ளார். இப்படம் மற்றும் பாடல்கள் உருவான விதம் காலத்தை கடந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“