/tamil-ie/media/media_files/uploads/2023/08/MGR.jpg)
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தாலும் எம்.ஜி.ஆர் பாடல் எழுத சொல்லிலும் கவிஞர் ஒருவர் பாடல் எழுத மறுத்த சம்பவம் திரைத்துறை வட்டாரத்தில் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
நாடக நடிகராக இருந்து திரைத்துறையில் நாயகனாக வளர்ந்தவர் எம்.ஜி.ஆர். தொடக்கத்தில் துணை வேடங்களில் நடித்த அவர், பின்னாளில் பெரிய ஹீரோவாக மாறினாலும், அவரை மாஸ நயகனாக மாற்றிய படம் மலைக்கள்ளன். நாமக்கல் ராமலிங்கம் கதை திரைக்கதை எழுத, மு.கருணாநிதி வசனம் எழுதியுள்ளார். . பக்ஷிராஜா ஸ்டூடியோஸ் சார்பில் ஸ்ரீராமுலு நாயுடு தயாரித்த இந்த படத்தை அவரே இயக்கி இருந்தார்.
இந்த படத்திற்கு பாடல் எழுத வந்த கவிஞர் தஞ்சை ராமையா தாஸ்ஒரு பாடலின் பல்லவியை எழுதி முடித்து சரணம் எழுத தொடங்கிய போது இயக்குனர் ராமுலுவுடன் பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கோபித்துக்கொண்டு கவிஞர் தஞ்சை ராமையா தாஸ் சென்னை திரும்பி விட்டார். அப்போது படப்பிடிப்பு சமயத்தில் எம்.ஜி.ஆர் மேக்கப் ரூமுக்கு சென்றபோது ஒரு சிறுவன் இதன் பல்லவியை பாடிக்கொண்டிருந்துள்ளார்.
இந்த பாடலை கேட்ட,எம்.ஜி.ஆர் இந்த பாடலை யார் எழுதியது எந்த படத்திற்காக எழுதியது என்று விசாரித்தபோது கவிஞர் தஞ்சை ராமையா தாஸ் – இயக்குனர் இடையேயான பிரச்சனை குறித்து தெரியவந்துள்ளது. ஆனால் இந்த வரிகளை விட மனமில்லாத எம்.ஜி.ஆர் கவிஞர் தஞ்சை ராமையா தாஸிடம் கேட்டுள்ளார். அதேபோல் எம்.ஜி.ஆர் சார்பாக இசையமைப்பாளர் சுப்பையா நாயுடு கவிஞர் தஞ்சை ராமையா தாஸிடம் பேசியுள்ளார்.
ஆனால் தனது முடிவில் உறுதியாக இருந்த கவிஞர் தஞ்சை ராமையா தாஸ் எம்.ஜி.ஆர் சொல்லியும் இந்த பாடலை எழுதாததற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இருந்தாலும் அந்த பாடலை விட மனமில்லாத எம்.ஜி.ஆர் கோவை அய்யா முத்துவை நேரில் பார்த்து இந்த பாடலுக்கு சரணம் எழுதுமாறு கேட்டுள்ளார். அவரும் எழுதி கொடுத்துள்ளார். அப்படி உருவான பாடல் தான் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே… இன்றவரை இந்த பாடல் ட்ரெண்டிங்கில் உள்ளது.
“தமிழ்இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.