தமிழ் க்ளாசிக் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்தவர் சி.வி.ஸ்ரீதர். 1954-ம் ஆண்டு ரத்தபாசம் என்ற படத்தின் மூலம் ஸ்டோரி ரைட்டராக சினிமாவ வாழ்க்கையை தொடங்கிய இவர், 1959-ம் ஆண்டு வெளியான கல்யாண பரிசு என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து மீண்டும் சொர்க்கம், விடிவெள்ளி, நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை, உரிமைக்குரல் உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருந்தார்.
அந்த வகையில் ஸ்ரீதர் இயக்கத்தில் கடந்த 1964-ம் ஆண்டு வெளியான படம் காதலிக்க நேரமில்லை. காதல் காமெடி படமாக வெளியான இந்த படத்தில், முத்துராமன், ரவிச்சந்திரன், நாகேஷ், பாலையா, ராஜாஸ்ரீ, காஞ்சனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவெற்பை பெற்ற நிலையில், படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
தமிழில் வெற்றி பெற்ற இந்த படம், பின்னர் தெலுங்கு, கன்னடம், இந்தி மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக செய்யப்பட்டு அங்கேயும் ஹிட்டடித்தது. பணக்கார மாப்பிள்ளைகளை பிடிக்க வேண்டும் என்று நினைக்கும் ஒருவரிடம் பணக்காரரின் ஒரே மகனாக நடிக்கும் ஒருவருக்கும் இடையில் நடக்கும் காட்சிகள் தான் படத்தின் கதை. இதில் பணக்கார மாப்பிள்ளையாக ரவிச்சந்திரன் நடித்திருப்பார்.
இந்த கேரக்டருக்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவர் நடிகர் சிவக்குமார். காக்கும் கரங்கள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவக்குமாருக்கு கந்தன் கருணை திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தில் இவர் முருகன் வேடத்தில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் சிவக்குமார் முன்னணி நடிகராக பல படங்களில் கமிட் ஆகி நடித்து வந்தார்.
அப்போது தான் இயக்குனர் ஸ்ரீதர், தனது காதலிக்க நேரமில்லை படத்திற்காக நடிகர் சிவக்குமாரை ஆடிஷன் செய்துள்ளார். ஆனால் இது முழுக்க முழுக்க காதல் படம் என்பதால், சிவக்குமாரின் முகம் குழந்தைத்தனமாக இருப்பதால், செட் ஆகமாட்டார் என்பதால் அவரை ரிஜக்ட் செய்துவிட்டு, தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் அப்பா நடிகர் கிருஷ்ணாவை தேர்வு செய்துள்ளார். ஆனால் மொழிப்பிரச்சனை வரும் என்ற காரணத்தினால் அந்த ஐடியாவையும் மாற்றிவிட்டு, கடைசியாக ரவிச்சந்திரனை தேர்வு செய்யதுள்ளார்.
ஆனால் தற்போது காதலிக்க நேரமில்லை படத்தை நினைத்து பார்த்தால், ரவிச்சந்திரனை விட வேறு யார் நடித்தாலும் இந்தக் கதைக்கு பொருந்தியிருக்க மாட்டார்கள் என்றுதான் சொல்ல தோன்றும், ஸ்ரீதர் ரவிச்சந்திரன் இருவரின் சினிமா கெரியரிலும், காதலிக்க நேரமில்லை மறக்க முடியாத ஒரு திரைப்படமாக அமைந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.