இளையராஜா இசையமைத்து விஜயகாந்த் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை கேட்க, யானை கூட்டங்கள் திரண்டு வந்ததாகவும், அந்த பாடல் முடிந்தவுடன் அந்த யானை கூட்டங்கள் அப்படியே திரும்பி சென்றுவிடும் என்றும் இளையராஜா தெரிவித்துள்ளார்.
Advertisment
1984-ம் ஆண்டு ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜயகாந்த், ரேவதி, சுரேஷ், ராதாரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் வைதேகி காத்திருந்தால். இளையராஜா இசையமைத்த இந்த படத்திற்கு, வாலி, கங்கை அமரன், பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர். படத்தின் அனைத்து பாடல்களும ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படமும் விஜயகாந்தின் திரை வாழ்க்கையில் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
இந்த படத்தில் இடம்பெற்ற ‘’ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு’’ என்ற பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும்போது, உடுமலைப்பேட்டை அருகே உள்ள ஒரு திரையரங்கில் இந்த பாடல் ஓடும் நேரம் மட்டும் யானைக்கூட்டங்கள் எந்த பயிரையும் நிலத்தையும் சேதபப்டுத்தாமல், தியேட்டருக்கு வந்து பாடலை கேட்டுவிட்டு, பாடல் முடிந்தவுடன் அதே மாதிரி எந்த சேதத்தையும் ஏற்படுத்தாமல் திரும்பி சென்றுவிடும்.
Advertisment
Advertisement
இது குறித்து மாலை மலர் செய்தித்தாளில் செய்தியாக வந்துள்ளது. உடுமலைப்பேட்டை அருகே காடுகளை ஒட்டிய பகுதியில் ஒரு டூரிங் தியேட்டர் இருந்தது. வைதேகி காத்திருந்தால் படம் அந்த தியேட்டரில் ஓடும்போது, ராசாத்தி உன்னை அந்த பாடல் வரும் நேரத்தில் யானைக்கூட்டங்கள் வந்து சென்றது என்று இசையமைப்பாளர் இளையராஜா சில ஆண்டுகளுக்கு முன்பு பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.